siruppiddy

ஞாயிறு, மே 16, 2021

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு தீர்த்தம் எடுக்கசெல்பவர்களுக்கு

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்திவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தின் தீர்த்தம் எடுத்தல் உட்சவம்.17-05-2021. நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையினை கருத்தில்கொண்டு அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அனுமதிக்கப்பட்ட நபர்கள் 24 பேருக்கும் பி.சி.ஆர் பரிசேதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு கலந்துகொள்ளவுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம், கிரியைதாரர்கள், முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் சிலாவத்தை கோவில்காரர்கள்,நோன்பு மடத்தில் நிற்பவர்கள், தீர்த்தக்கரையில் உள்ள ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினர் என தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள 18 பேருக்கும் 15.05.2021 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் ஆறு பேருக்கும் 16.05.2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உழவு இயந்திரத்தில் மட்டுப்படுத்திய நபர்கள் மட்டும் தீர்த்தம் எடுக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்வுக்கான தீர்த்தம் எடுத்தல் நிகழ்வு நாளை 17.05.21 அன்று நடைபெற்று முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி இடம்பெறும் அத்தோடு தொடர்ந்து எழு நாட்கள் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்று 23.05.21 அன்று ஞாயிற்றுக்கிழமை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து தீர்த்தம் வற்றாப்பளை அம்மன் ஆலயம் எடுத்து செல்லப்பட்டு 24.05.21 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கள்
 நடைபெறுவது வழக்கம்.
பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வு நடைபெற அரசாங்க அதிபர்,
காவல்துறையினர், ஆலய நிர்வாகத்தினர் ,சுகாதார பிரிவினர் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட கூட்டங்களில் தீர்மானமாக 
எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவினரும் படையினரும் மட்டுப்படுத்தப்பட்ட நபர்களே நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என 
அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர பக்த்தர்கள் எவரும் நாட்டு நிலமையினை கருத்தில்கொண்டு கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், ஏப்ரல் 20, 2021

தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தேர் எரியூட்டல் 20.04..1986

யாழ் வடமராட்சியில் அமர்ந்து அருள் பலித்துக்கொண்டிருக்கும்  பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் சித்திரத் தேர்  1986 ஆம் ஆண்டு இராணுவத்தினால் எரிக்கப்பட்ட நாள் 20.04..1986 அன்று  
இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் ,உலகில் நான்காவது பெரியதேர்  என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு
 செல்வச் சந்நிதி சித்திரத் தேர் 20-04-1986 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், ஏப்ரல் 13, 2021

மலரும் மங்களகரமான பிலவ வருடப் பிறப்பு சுப நேரங்கள் .14.04.2021

 மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கிறது.
விஷூ புண்ணிய காலம்
முன்னிரவு நாடி 38 விநாடி 51 (9.39 மணி) முதல் அன்று பின்னிரவு நாடி 58 விநாடி 51 (5.39 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.
மருத்து நீர், ஆடை
இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் நீலம், சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.
உண்டிகள்
அறுசுவை உணவுடன் பொரிக்கறி, கசப்பு என்பவை சேர்த்தருந்த வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம், பூரம், உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம், பூராடம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
கைவிசேஷம்
14.04.2021 காலை 09.09 - 09.52 வரை
14.04.2021 பிற்பகல் 2.22 - 4.11 வரை
16.04.2021 அதிகாலை 4.14 - 5.07 வரை
17.04.2021 காலை 07.40 - 09.00 வரை
17.04.2021 பிற்பகல் 03.04 - 03.59 வரை
ஆதாய விரய பலன்
மேடம் - நஷ்டம்
இடபம் - நஷ்டம்
மிதுனம் - சமசுகம்
கர்க்கடகம் - நஷ்டம்
சிங்கம் - பெருநஷ்டம்
கன்னி - சமசுகம்
துலாம் - நஷ்டம்
விருச்சிகம் - நஷ்டம்
தனு - அதிகலாபம்
மகரம் - சமசுகம்
கும்பம் - சமசுகம்
மீனம் - அதிகலாபம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 

வியாழன், ஏப்ரல் 01, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு.துரைராஜா தியாகராஜா 01.04.21

யாழ் நவற்கிரி அச்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா ( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப
உறவுகளுடன்,
கொண்டாடினார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,சகோதரர்கள் மருமகள் மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், மருமக்கள் மச்சான் மச்சாள் மார்சகலன் சகலி மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்களும் உற்றார் உறவினர்கள்,
, இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்,சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து .இவ்வுறவை
இன்று புதிதாய் பிறந்த உனக்கு என் வாழ்த்துக்கள்
என்றுமே நீ இந்த வெள்ளை மனதுடன்
வாழ என் வாழ்த்துக்கள் .
நீ பிறந்தது சாதனைகள் புரிவதற்கு அல்ல
மனிதனாய் வாழ்வதற்கு
மனிதனை மனிதனாய் புரிந்துகொள்ள
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
வாழ நீ வாழ்த்துக்கள்
உங்களை நாம் பகிர்ந்து கொள்வோம்
என்றும் அன்புடன் வாழ கற்று கொள்வோம்
உறுதிமொழி ஏற்றுவாழ
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும்
வாழ்த்துகின்றன வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>









வெள்ளி, மார்ச் 19, 2021

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய ரதோற்சவம்.19.03.2021

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில்  வீற்றிருந்து வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்தி பெற்ற எம் பெருமான் அருள் மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன ரதோற்சவம் ( தேர்த்திருவிழா)14ம் நாள் பகல். 19-03-2021. 
வெள்ளிக்கிழமை இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
திரு த் தேரில் அமர்ந்து,
வீ திஉலாவந்தார் எம் பெருமானின் தேர் திருவிழாமிகச்சிறப்பாக நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்டதில் திரு வீதி தேரில் உலா வந்தார்,

ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர்த் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>















ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி, தியாகராஜா.தர்மா 28.02.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா.( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2021..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார்  இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புஅம்மா ,
மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர் இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் இனிய 
பொன்னாலே உன் பிறந்த நாள். அனைத்து தினங்களும் உன் வாழ்க்கையில் பொன்னாய் மிளிர உன்னை வாழ்த்துகிறேன். 
கடவுள் கருணையினால் இன்று 
போல் என்றும் உன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க, நேசமான நண்பர்களுடனும் பிரியமான உறவுகளுடனும் என்றும் குதூகலுடத்துடன் உன் புன்முறுவலோடு நீடூடி வாழ இறைவனிடம் உனக்காக பிரார்த்திக்கிறேன்நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெறஆசை நிறைவேற 
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்








 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

வியாழன், பிப்ரவரி 04, 2021

உங்களது நல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள்

வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான  நல்ல விஷயங்கள் நிலைக்க நாம் இந்த ஆன்மீக குறிப்புகளை பின்பற்றுவது சாலச்சிறந்தது… 
1, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2. செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் 
நடப்பது சிரேஷ்டம்.
3. வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
5. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.7. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, 
தரையில் சிந்தக்கூடாது.
8. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருகும்.
9. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. 
அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே
 வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே 
வந்துவிடும்.
10. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி 
மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக 
அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11, சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு 
மிகவும் பிடித்தவை.
12. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் கோமாதா பூஜை குபேர
 பூஜைக்கு சமம்.
14.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.
17. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18, விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி
 கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20. வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
21. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
22, எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு 
திருமகள் குடியேறுவாள்.
23, வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், 
சந்தோஷமும் பெருகும்.
24, எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி 
வாசம் செய்கிறாள்.
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், 
நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>