siruppiddy

வியாழன், செப்டம்பர் 25, 2014

சிறப்பாக இடம் பெற்ற நவராத்திரி விழா

வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம் பெற்றன.வவுனியா வைரவபுளியங்குளம் ஆதவிநாயகர் மற்றும் குட்செட் கருமாரி அம்மன் கோயில்களில் கொலு வைக்கப்பட்டு விசேட பூசைகள் இடம் பெற்றன.
 


வெள்ளி, செப்டம்பர் 05, 2014

குழந்தை திருமணம், பாக்கியம் அருளும் விநாயகர் கோவில்கள்

விநாயகப்பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் விநாயக சதுர்த்திக்கு எட்டு நாட்களுக்கு முன்பாக உப்பூரில் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர், பக்தர்களுக்கு மயில் வாகன ரூபமாகக் காட்சி தருவார். ஆவணி மாதம் கிருஷ்ணபட்சம் ஏகாதசி அன்று மட்டும் இந்த தரிசனத்தை காணப்பெற்றவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது உறுதி!
 * தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே ஒரு கி.மீ தொலைவில் காவிரிக்கரையில் உள்ளது திருவலஞ்சுழி வெள்ளை வாரணர் கோயில். கமலாம்பாள், வாணி என இரு மனைவியர் உண்டு. இவரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். பிள்ளைச்செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம். திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நாற் சந்திப்பில் அமர்ந்து அருள் புரிந்து வருகிறார் ஸ்ரீ பெருநாட்டுப் பிள்ளையார்.
இக்கோயில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான்திறந்திருக்கும். இந்தக் கோயிலின் சிறப்பே அரை மணி நேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக்காண தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி,திருமண விலேஷம் என்று அனைத்து வேண்டுதல்களுக்கும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் செவிசாய்த்து பெருநாட்டுப் பிள்ளையார் நிறைவேற்றி தருகிறார்.
 * திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள மேலக் கோட்டையின் கன்னி மூலையில் ஸ்ரீதலை வெட்டி பிள்ளையார் இருக்கிறார். கல்யாணத்தடையால் கலங்கி தவிப்பவர்கள் இங்கு வந்து, பொங்கல் படையிலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவித்து, பச்சரிசி, எள், வெள்ளம் எனக் கலந்த கலவையைத் கிழே சிந்திய படி விநாயகரை மூன்று முறை வலம்வர வேண்டும்.
பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யணவரன் தேடி வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
 * திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெஞ்சாலையில் 12 கி,மீ மேற்கே அமைந்துள்ள கிராம் தீவனூர். அந்தக் கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
 * விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில் கோரையாற்றின் கரையில் அமைந்துள்ளார் மதுரவிநாயகர். திருமணத் தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து,
புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும், அரளி, சிகப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலி கட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதே போல் வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கி நல் வாழ்க்கை அமையும்.
 * நெல்லை காந்திமதியம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும். குழந்தை பிறந்ததும் இங்கு சந்திதிக்கு வந்து குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத்தந்து, வெளிப்புறமாக குழந்தையை வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, ஜூலை 06, 2014

நடைபெற்ற சிறுப்பிட்டி ஞானவைரவர் தீர்த்த திருவிழா

 
   சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்அலங்கார உற்சவத்தில்  தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எம் பெருமான் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் பக்தர்கள் முன்னும் பின்னும் சூழ, வழி எங்கும் எம்பெருமானுக்கு அருச்சனை ஆராதனை நடாத்தி எம்பெருமான் நிலாவரை   சென்றடைந்து புனித தீர்த்த கேணியில் பக்தி பரவசத்துடன் தீர்த்தம் ஆட.மற்றும் அங்கு பக்தர்கள் தூக்குகாவடி ஆட்டக்காவடி என  எடுத்து  எம்பெருமானிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றினார். அத்துடன் கொடியும் ஊஞ்சல் பாட்டு இடம்பெற்று இனிதே உற்சவம் நிறைவடைந்தது. உபயம்.ந அம்பிகைவாசன்
தீர்த்த திருவிழாப்புகைப்படங்கள்படங்கள்இணைப்பு
 
  

சனி, ஜூன் 28, 2014

நயினை நாகபூஷணி அம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!


naka1
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 16 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது. எதிர்வரும் யூலை மாதம் 11 ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், யூலை 13 ம் திகதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
மற்றைய செய்திகள்


naka naka0

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கொடியேற்றம் .

வரலாற்றுச்சிறப்பு மிகு நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள்
ஆலய உயர் திருவிழா எதிர்வரும் [28.06.2014] கொடியேற்றத்துடன் .
ஆரம்பம் ...

செவ்வாய், மே 20, 2014

பிறந்த நாள் வாழ்த்து.வே., ஸ்ரீசபேஷன் [20.05.2014]


நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள்   இன்று
  [[20.05.2014] இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள்  மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இனணந்து நவற்கிரி இணையங்களும்நிலாவரை இணையங்களும் நிறைந்த  இறை அருள் பெற்று   பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென   வாழ்த்துகின்றோம்,,,

வல்லை பிள்ளையார் கோயில்

யாழ்ப்பாணம் மற்றும் வடமராட்சி  திசையில் இருந்து வருபவர்கள் தங்கள் வேலைகள்
பயணங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற மிகுந்த நம்பிக்கையுடன் வணங்கும் மிகவும் சக்தி வாய்ந்த
வல்லை பிள்ளையார் 
அருள்மிகு வல்லை பிள்ளையார் கோவில்

 

செவ்வாய், மே 13, 2014

சுவிசிலுள்ள சைவ ஆலயங்கள்


அருள்மிகு சிவன் கோவில் Industrie Str.34 / Postfach. 1006 CH-8152 Glattbrugg. T.P:- 044 371 02 42 http://www.sivankovil.ch அட்லீஸ்வீல் சிவசுப்பிரமணியர் ஆலயம். Berg Str.54 Sihl weg.03 8030 Zürich. 8134 Adliswil ZH. T.P:- 044 262 33 88 T.P:- 044 709 06 30 http://www.tamilkrishna.org http://www.mkzh.ch சிறீ விஸ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் Sood Ring.34 Industrie Str.27 8134 Adliswil ZH. 9430 St-Margretten/SG T.P:- 044 771 11 70 T.P:- 071 740 08 16 http://www.srithurkkaswiss.ch ஹரே கிருஸ்ணா ஆலயம்.Berg Str.54 Sihl weg.03 8030 Zürich. 8134 Adliswil ZH. T.P:- 044 262 33 88 T.P:- 044 709 06 30 http://www.tamilkrishna.org அருள்மிகு ஸ்ரீ நவசக்தி ஆலயம் கூர் Sri Navasakthi Vinayagar Temple Chur Bienenstrasse 6, 7000 Chur, Tel. 081 253 16 52 Sri Navasakthi Vinayagar Temple, Postfach 332, 7007 Chur லவுசான் பிள்ளையார் கோவில் Av. Rochelle.12 6 Via Monnet 1008 Prilly VD. ஜெனிவா பிள்ளையார் கோவில் Av. Rochelle.12 6 Via Monnet 1008 Prilly VD. 1214 Vernier GE. T.P:- 022 341 15 96 சொலத்தூன் துர்க்கை அம்மன் ஆலயம். Braehl Str.06 Bahn Str.21 2540 Grenchen SO. 3008 Bern. T.P:- 032 653 30 64 பேர்ன் சிறீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம். Braehl Str.06 Bahn Str.21 2540 Grenchen SO. 3008 Bern. T.P:- 032 653 30 64 T.P:- 031 381 45 22 அருள்ஞானமிகு ஞானலிங்கேஸ்வரர் ஆலயம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் Schwarztorstr. 102 Bern Str.116 3007 Bern. 3250 Lyss. T.P:- 078 645 30 42 புறுக்டோர்வ் பிள்ளையார் ஆலயம் லங்கனோ விநாயகர் ஆலயம். Saege gasse.18 Schaerischachen.809a 3400 Burgdorf. 3552 Bärau. T.P:- 034 495 63 87 சிறீ சித்தி விநாயகர் ஆலயம். Industrie Weg.43 Hard Str.56 3612 Steffiburg அருள்மிகு இந்து ஆலயம் பாசல் Industrie Weg.43 Hard Str.56 3612 Steffiburg. 4132 Muttenz BL. T.P:- 061 332 10 96 http://www.hindutemple.ch ஓல்னர் மனோன்மணி அம்பாள் ஆலயம். Holder Matt Str.03 Industries Str.44 4632 Trimbach/Olten. 5000 Aarau T.P:- 062 293 20 98 அறோ முருகன் ஆலயம். Holder Matt Str.03 Industries Str.44 4632 Trimbach/Olten. 5000 Aarau T.P:- 062 293 20 98 T.P:- 062 822 01 96 லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம். ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சுக் Bahnhof Str.19a Halden Str.05 6037 Root LU. 6340 Baar. T.P:- 041 450 02 84 T.P:- 041 760 54 47 சிறீ சிவசுப்பிரமணியசுவாமி கோவில் கூர் சிறீ நவசக்தி விநாயகர் ஆலயம். Via Gaggiolo.35 Benen Str.06 6855 Stabio TI. 7000 Chur. T.P:- 081 253 16 52

இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள்


எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில் navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

 

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/ http://www.navakkri.com/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch
/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/செவ்வாய், ஏப்ரல் 22, 2014

திரு சின்னத்தம்பி அருளின் பிறந்தநாள் வாழ்த்து.22.04.2014.

நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் இன்று ,22.04.2014.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும்  பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்{காணொளி }

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

உச்சிப்பிள்ளையார் கோயில்

 தென்னிந்திய மாநிலமான தமிழகத்தி்ன் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.)
இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.
மலைக்கோட்டை திருச்சி
மரபு வழி வரலாறு[தொகு]
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.

விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார்.

சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.
இக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம்