siruppiddy

வியாழன், அக்டோபர் 03, 2013

உலகின் மிகப்பெரிய405 அடி உயர கோபுரத்துடன் கோயில்


பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினத்தன்று (11ம் தேதி) நடத்தப்படுகிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறியதாவது:-

இந்த கோயிலை கட்டுவதற்காக 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ரூ.500 கோடி செலவில் கட்டப்படும் இந்த கோயிலின் வளாகத்தில் சிவாலயம் உள்பட 18 சிறிய ஆலயங்கள் அமைக்கப்படும்.

சிவாலயத்துக்கள் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் உருவாக்கப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமரும் வகையில் பிரமாண்டமான அரங்கமும் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
கம்போடியா நாட்டில் இந்து மன்னர் சூர்யவர்மனால் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயில் 215 அடி உயரம் கொண்டது. இந்த கோயிலை உலகின் புராதாண சின்னங்களுள் ஒன்றாக ‘யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது.
பீகாரில் கட்டப்பட உள்ள இந்த புதிய கோயில் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கு உயரம் கொண்டதாக உருவாகலாம் என தெரிகிறது.
(படத்தில் காணப்படுவது கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் ஆகும்)

 

திங்கள், செப்டம்பர் 23, 2013

முத்துமாரிஅம்மன் தேர் திருவிழா காணொளி


சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்
 அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோ ங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள்
2013 ஆண்டுத் திருவிழா இனிதே நடந்தேறியது இதில் பக்தர்கள் கலந்து தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளார்கள்
 இந்த ஆண்டுத்தேர்த்திருவிழாவும் இனிதே நடந்தேறியுள்ளது இதன் உபயகாரர்கள் நல்லையா.சோதிப்பிள்ளை குடும்பத்தினர் இவர்கள் தேர்திருவிழாவை காட்ச்சிப்படுத்தி உங்கள் பார்வைக்காகவும் ஊர் உறவுகள் பார்வைக்காகவும்
 தந்து உதவியுள்ளார்கள் இவர்கள் போன்று எங்கள் ஊர்பதிவுகளைத் தந்து உதவினால் உலகப்பந்தில் வலம் வரும்
 ஒருகரம் தட்டி ஓசை வராது இணைவோம் செயல்படுவோம்  (11.03.13)

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

பிள்ளையார்சதுர்த்தி

 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
 இவை நான்கும் கலந்து உனக்கு
 நான் தருவேன்..
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே
 நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.
அனைவருக்கும் பிள்ளையார்
 சதுர்த்தி வாழ்த்துகள் —

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

நல்லூர்ப் பெருந்திருவிழாவின் 15ம் நாள்

மாலை நேர திருவிழாவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப் பெருமான் ஆட்டு.க்கடா வாகனத்தில் வெளிவீதியுலா வரும் காட்சிகளின் தொகுப்பு.,26.08.13


செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

சுவெற்றா ஜேர்மனி அம்மன் தேர்த்திருவிழா:


wttசுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர்த்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.08.2013 பக்தர்கள் படை சூழ நடை பெற்றது அதன் காணொளியை இணைய வாசகர்களுக்காக பதிவு செய்கின்றோம்.wt

சனி, ஆகஸ்ட் 10, 2013

கண்ணனின் மதி நுட்பமும்"""

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன்.
வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார்.
பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன.
அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்து கொண்ட அந்த அழகி யார்? அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான். முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது.
பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

திருமகளே நின் கருணை நிறை பார்வை


அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
 அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
 இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
 உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
 ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
 விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
 வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே

வியாழன், ஜூலை 25, 2013

பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்நாள் ஆடி பூரம் விரதம்""


ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் “ஆடிப்பூரம்` என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம்.
ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள்.
காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் விரதமிருந்து அன்னையை தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும்

செவ்வாய், ஜூலை 23, 2013

ஆடி அமாவாசை, இந்த புனித நாளின் சிறப்பு


** ஆன்மீகம் ** ஆடி அமாவாசை, எனப்படும் புனித நாளில், ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற தானங்களை செய்யுங்கள். உங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்து சிறக்கும்.
இந்த நாளில், பித்ருக்களுக்கான வழிபாட்டில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுவது சிறப்பு,,,,,,
 

வெள்ளி, ஜூலை 19, 2013

இறைவனுடைய ஸந்நிதானத்தில்

 
சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது

தெய்வக் குறளாம் திருக்குறள்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
 வாரி வளங்குன்றிக் கால்.
 மு.வ உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) .
மணக்குடவர் உரை:
ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.

வெள்ளி, ஜூலை 12, 2013

தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு.தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜ ராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டு ம் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத் தியவன் ராஜ ராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஆயி னும் இவற்றில் முரண்பாடுகள் காணப் படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப் பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படை யில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
 இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜ ராஜன் காலத்தில் கை யாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்துகொள் வது அவசியம்…

பெரிய கோயில் அளவு கோல்
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்க மாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழ மே இருவிரல் நீட்டித்து பதி னாறு விரல் அகலத்து, ஆறு விரல் உசரத்து பீடம், ஒரு விர லோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத் தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அள வாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப் படையில் விமான த்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதா வது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.
இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்ப தே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவ றையின் இரு தளங்களிலும் விமா னத்தின் பதின்மூன்று மாடி களும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது. அலகு களின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சது ரம். கருவறையின் உட்சுவரும், வெளி ச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமான த்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகு கள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடி கிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகு கள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திற னைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ் வொரு அடுக்கிலும் நான்கு கற் கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின் றன என்பதைக் கவனித்த பின் னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்ட ப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறு கள் மட்டுமே பரிசீலிக்கலாம். கரு வறையின் உட்சுவருக்கும், வெளி ச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப் பாதை உள்ள து. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணை க்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத் ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன் றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகா ரத்திலிருந்து விமா னத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதி களாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலி ருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக் கும் அதன் உயரத்து க்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமை க்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப் படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்ட ப்பட்ட உறுதி யான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப் பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமா னம் கட்டுவதற்குச்சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட் டது. இது அமைப்பில் சீனா வின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சார த்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட் ட சாய்வுப் பாதையின் இறுதி கட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தி ன் சுவர்கள் இணைக்கப்பட்டி ருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இது மட்டு மன்றி இந்த அரண் சுவர்களுக் கு நிறைய கற்களும் தேவை ப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட் டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமி ருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப் பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (ய உதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆத அஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத் துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத் தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத் தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைக ளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்து ச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இம்முறையில் எளிதாக விருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முத லிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், ஜூலை 09, 2013

இறைவனுக்கு உகந்த பூக்கள் எவை


 கடவுளுக்கு மிக நெருக்கமான விடயம் பூக்கள் என்று கருதுகிறோம். அதனால் தான் இறைவனை அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம். எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் குறிப்பிட்ட கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் என்பதே ஐதீகம்.விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
முருகனுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் பயன்படுத்தலாம்.துர்க்கைக்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை செய்யப்படும்விஷ்ணுவிற்கு தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்சனை செய்யப்படும்.
பூக்க்களால் அர்சனை செய்வதால் நமக்கு எண்ணிட முடியா பலன்கள் கிடைக்கும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
தாமரை மலர்கள் தெய்வீகத்தன்மையை தரவல்லது. நமக்குள் ஒரு சக்தியை தந்து நம்மை இயங்க வைக்கிறது.முல்லை மற்றும் மல்லிகை பூக்கள் புனித தன்மையை வழங்கி உள சமநிலையை தரக்கூடியது.துளசியை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை அதன் தெய்வீகத்தன்மையும் பக்தியும் நாம் அறிந்ததே.
நமக்கு தேவை இல்லாத துன்பங்களை நீக்கி தேவையான நன்மைகளை பெற மருக்கொழுந்து மலர் உகந்தது.
எல்லோருக்கும் பிடித்த ரோஜா மலர்கள் ஆண்டவனிடம் அன்பு அதிகரிக்க செய்து இனிய எண்ணத்தைதந்து தியான உணர்வை வளர்க்கும்.
நம் மனதில் சிறந்த எண்ணங்கள் மேலோங்கவும் விருப்பங்கள் நிறைவேறவும் பவள மல்லி பூக்கள் உதவும் .
நமக்கு பயம் நீங்கி தைரியம் வரவேண்டும் எனில் எருக்கம் பூக்க்களால் அர்சனை செய்ய வேண்டும்.
செம்பருத்தி, அரளி ஆகிய இரு பூக்களும் நம் மனதை தவறான பாதையில் பயணிக்காது தடுத்து நன்நெறிக்கு இட்டு செல்கிறது.
நந்தியாவட்டப் பூக்கள் பணம், பொருள் தேவையை நிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்தது

புதன், ஜூலை 03, 2013

மந்திர யோகம் - "சக்தி பீஜம்".


தாய்மை வழிபாடு அல்லது சக்தி வழிபாடு என்பது தொன்மையானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். இந்த சக்திக்குரிய மந்திரமாக "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை குறிப்பிடுகிறார் திருமூலர்.
பிரணவ மந்திரம் எப்படி சிறப்பாக விளங்குகிறதோ அது போலவே "ஹ்ரீம்" சிறந்து விளங்குகிறது

செவ்வாய், ஜூலை 02, 2013

சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"


  புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் .
இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .
இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் .
நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் .
இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் .
எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம் சித்திக்கும் .
எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்.
உலகத்தில் உள்ள அனைவருமே, ஒரு திரையைப் போட்டபடியே பேசுகிறோம், பழகுகிறோம், வாழ்கிறோம்.
சகஉயிர்களைப் பார்ப்பதையும் இறைவனை அடைவதையும் உணர்த்துவதே சிதம்பர ரகசியத்தின் நோக்கம்.
மேலும் இப்படியும் கூறு கிறார்கள்
 நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .
மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் .
மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

வியாழன், ஜூன் 27, 2013

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்

 
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது. இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.

சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள்.

மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும்.

விளக்கேற்றவேண்டிய நேரம்

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்

செவ்வாய், ஜூன் 25, 2013

ஸ்ரீ மாணிக்கப் பிள்ளயார் அபிஷேகப்பூர்த்தி 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளயார், 2013,மண்லாஅபிஷேகப்பூர்த்தியை கண் குளிர பார்த்து எம் பெருமானின் திரு வருளைப் பெற்று உய்யும் வண்ணம் வேண்டுகின்றோம் {காணொளி இணைப்பு,                        

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்


 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.

ஞாயிறு, ஜூன் 23, 2013

ஆன்மிகம் என்பதன் அர்த்தம்.


ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
 அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக...


லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்! லக்ஷ்மி கடாக்ஷம்’ என்னும் சொல் ஏதோ செல்வச் செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல. அது ஒரு மிகப் பெரிய பதம். சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது. வெற்றி, வித்தை, ஆயுள், சந்தானம், தனம், தான்யம், ஆரோக்கியம் இப்படி அனைத்தும் ஒருங்கே அமைவது தான் லக்ஷ்மி கடாக்ஷம்.
பலருக்கு ஒன்றிருக்க ஒன்றிருப்பதில்லை. காரணம் திருமகளை தக்கவைத்துக் கொள்ளவும், அவளது கருணா கடாக்ஷத்தை முழுமையாக பெற வழி தெரியாதவர்களாகவும் அதை பற்றி யோசிப்பதற்கு கூட இந்த ஃபேஸ்புக் யுகத்தில் நேரமில்லாவர்களாகவும் இருப்பதுவும் தான்.
முன்வினைப் பயனால் ஒருவர் பெருஞ் செல்வத்தை தற்போது அடைந்திருந்தாலும் அதற்குரிய பலன் முடிவடையும் போது அது குடம் கவிழ் நீர் போல ஓடிவிடும். அவ்வாறு இல்லாமல் வினையற்ற செல்வம் பல்கிப் பெருக, எங்கும் மங்களம் பெருக, லக்ஷ்மி கடாக்ஷம் நம் கிரகத்தில் நிலைக்க என்ன செய்யவேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? என்பதை உங்களுக்கு இந்த தீப ஒளித் திருநாளில் விளக்குவதற்கான பதிவே இது.
பெரியோர்கள் கூற பல்வேறு தருணங்களில் கேட்டது, சிறுவயது முதல் படித்தது, என் தாயாரிடம் கேட்டது, படித்தது, என அனைத்தையும் தொகுத்து தந்திருக்கிறேன். பின்பற்றுங்கள். பலன் பெறுங்கள். லக்ஷ்மி கடாக்ஷம் உங்கள் கிரகங்களில் நிலைக்க திருவருள் துணை புரியட்டும்.
கீழே நாம் கூறிய முறைகள் அனைத்தும் நீங்கள் முயன்றால் சுலபமாக கடைபிடிக்க கூடியவைகளே. அரைகுறையாக இவற்றை கடைப்பிடித்து வந்த நான் தற்போது கூடுமானவரை முழுமையாக கடைபிடிக்க துவங்கியிருக்கிறேன். விரைவில் சுபம் பெருகும்!
திருமகள் எவரிடத்தில் நிலைப்பதில்லை?
திருமகள் எனப்படும் மகாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. “இது ஏன்?’ என அந்த பரந்தாமனே ஒரு முறை அன்னையிடம் கேட்க, அதற்கு அவள், “தர்மம் செய்யாத கருமிகள், மிருகங்களை வதைத்து உண்பவர்கள், சூதாடிகள், பரத்தை வீட்டுக்குப் போகிறவர்கள், குடிகாரர்களை கண்டால் எனக்கு பிடிக்காது.”
“அதிகமாக கோபப்படுபவர்கள், பொய் சொல்பவர்கள், பொறாமைக்காரர்கள், தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள், தன்னிடம் பணம் உள்ளது என கர்வபடுகிறவர்கள், ஏழைகளை கண்டு இரக்கப்படாதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது; ஒரு வேளை வினைப் பயனால் அது கிடைத்திருந்தாலும் அது நிலைக்காது” என்றாள்.
இதை கேட்டு மகிழ்ந்த பரம்பொருள், “இந்த அவ நடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் எப்போதுமே இருக்கும் என்று வரமளிக்கிறேன்” என்றானாம்.
சாராய அதிபரின் வாழ்க்கை
மற்றவர்களை துன்புறுத்தியும் தவறான வழிகளிலும் ஈட்டப்படும் செல்வம் அவனை அழவைத்தவாறே அவனை விட்டுச் சென்றுவிடும். உதாரணத்திற்கு சாராய சக்கரவர்த்தி எனப்படும் தொழிலதிபர்  ஒருவரின் சமீபத்திய நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அவரின் தற்போதைய நிலை என்ன? மதுவின் மூலம் கிடைத்த வருமானம் என்ன செய்தது பார்த்தீர்களா? வேறொன்றில் நஷ்டம் ஏற்பட்டு கடைசியில் அனைத்தையும் விற்கவேண்டிய துர்ப்பாக்கியம். எத்தனை செல்வம் இருந்தும் என்ன? அவரால் நிம்மதியாக உறங்க முடியுமா?
இதைத் தான் வள்ளுவரும் கூறுகிறார்…..
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (குறள் 659)
பொருள் : பிறர் அழுமாறு துன்புறுத்திப் பெற்ற பொருட்கள் எல்லாம் தான் அழுமாறு தன்னை விட்டுப் போய்விடும். நல்வழியில் ஈட்டிய செல்வம் பறிபோனாலும் அது திரும்ப கிடைத்துவிடும்.
மேற்படி மதுபான அதிபரின் தொழிலால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தனவோ? எத்தனை பத்தினிகளின் வயிறு பற்றி எரிந்தனவோ?
இன்றைக்கும் இந்த முன்னேறிய காலகட்டத்திலும் மின்சாரமின்றி நம் மாநில மக்கள் தவிக்கவும் தொழில்கள் நசிந்து போகவும் காரணம், மதுவினால் கிடைக்கும் வருவாய் தான். குறுகிய ஆதாயத்தை மனதில் கொண்டு அரசாங்கமே மதுவை டாஸ்மாக் என்ற பெயரில் விற்பது என்றைக்கு முடிவுக்கு வருகிறதோ அப்போதே இது போன்ற துர்பாக்கியங்களும் முடிவுக்கு வரும்.
அதே போல, வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் செய்யாது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்பவனது செல்வம் கள்வர்களால் அபகரிக்கப்படும். இதைத் தான் ஒளவை, “ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்” என்று கூறியிருக்கிறார்.
ஆக  அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்தில் ஒரு சிறிய பங்காவது தான தர்மங்கள் செய்து வரவேண்டும். அப்போது தான் இருக்கும் செல்வம் விருத்தியடையும். எந்த சூழ்நிலையிலும் எவராலும் கவர முடியாது.
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக கீழ்கண்டவைகளை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நடைமுறைப்படுத்துங்கள். சுபமஸ்து!
உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
(நம் தள வாசகர்களுக்கு நெல்லி மரம் வீடு தேடி வர இருக்கிறது. விபரம் விரைவில்….!)
3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
11) விளக்கை  தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
16)  எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
27)  இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
48) தங்கம் எனப்படும்  சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ இந்த தீபாவளித் திருநாளில் வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்,

திங்கள், ஜூன் 17, 2013

கிருஷ்ண ஜெயந்தி


* வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். "எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
 * அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
 * கிருஷ்ணலீலையைக் கேட்டால் பசி, தாகம் போன்ற உலகியல் விஷயங்கள் நமக்கு தோன்றாது. மதுரமான கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
 * புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய கண்கள் தாமரை மலர் போல மலர்ந்துள்ளன. வசீகரமான மயில் இறகு தலையில் அசைய கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்ததுபோல நம் உள்ளத்தை மயக்குகிறார். கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர், நமக்கு மழை போல் அருளை வாரி வழங்குகிறார்

வெள்ளி, மே 31, 2013

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு ஒர் பாடல்

 
பார்வையிட வரும் இணைய நன்பர்களோ இந்தப்பாடலானது ஓரு வரலாறு என்று கூடசொல்லலாம்  திரு தேவன்ராஐா
அவர்கள் கம் ஆலய தேர் தரிசனதிற்கு வந்திருந்தபோது  எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நட்ப்புரீதியா வந்தபோது
திரு தேவன்ராஐா அவர்களுடன் உரையாடியபோது  தனது ஆதங்கத்தை தெரிவித்தார் அதாவது  தனது ஊரான 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்க ஆசைப்படுவதாக.  அவரின் ஆசை நிறைவேற இறைவன் அருள் கூடியதால்
இந்தப்பாடலானது இரண்டுநாட்களில்  உருவாகி காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமல்ல விமலும் தேவன்ராஐாவும் நானும் இணைந்து எழுதிப்பாடவைத்துள்ளேன் அத்தோடு இத்தப்பாடலை  இணைந்தும் விமலும் தேவன்ராஐாவும் நானும்  எழுதியுள்ளோம்
இணைந்து செயலாற்றல் எமக்கு இன்பம் ஊட்டும்  எம்மிடையே ஒழிந்திருக்கும் கலைஞர்களை  என்றும் அவர்கள் திறன் அறிந்து வலம் வரும் 
எஸ‌்.ரி.எஸ‌் கலையம்  இந்த சிறந்த சிந்தையுள்ள கலைஞர்களுடன் பணியாற்றுவது  சிறந்த பணியாக காத்திருக்கிறது (குறிப்பாக)இந்தக்கலைஞன் மிருதங்கவாத்தியத்திலும் சிறந்த ஒரு கலை
ஞன் என்பதும் குறிப்பிடத்தக்கது
இக்கலைஞன்  இந்தப்பாட லைப் பாட நினைக்கவில்லை  ஆனாலும் இவர் திறன் அறிந்தேன்  அதனால் இவரையும் இணைத்து  இப்பாடல் உருவாக்கியுள்ளேன்.
இவர்கள் கலைவா ழ்வு  உயர  வாழ்த்துக்கள்.  (காணெலி)

சனி, மே 11, 2013

டார்சனின் பிறந்தநள் வாழ்த்து

பிறந்தநள் வாழ்த்து நவற்கிரியைபிறப்பிடமாகவும் பரிஸ் பிரான்ஸ் சில் வசிக்கும்  திரு ராஜ சேகரம் அவர்களின் புதல்வன் டார்சனின் ஐந்தாவது    பிறந்த நாள் ,11.05.2013 இன்று வெகு சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு  அப்பா அம்மா  அக்காமார் அண்ணாமார்  அத்தான்மார்  தம்பிமார் தங்கச்சி மார்   மச்சாள்மார் மச்சான்மார்பெரியப்பாமார் பெரிஅம்மாமா  சித்தப்பாமார் சித்திமார்  மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்{காணொளி }

வெள்ளி, மே 03, 2013

மாரி அம்மன் பற்றியஉரை ,,,

தேச மங்கையற்கரசி மாரி அம்மனின் மகிமையும் ஆடி மாதம் பற்றிய விளக்கமும் மிகவும் அழமான சிறந்த உரை [காணொளி இணைப்பு ]

வியாழன், ஏப்ரல் 25, 2013

அருளின் பிறந்தநாள் வாழ்த்து

நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்டதிரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் ,22.04.2013.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணாமார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் தேவன்குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்{காணொளி }

ஸ்ரீமாணிக்கபிள்ளயாரின்பாடல்

மாணிக்கபிள்ளயாரின் மனதைஉருக்கும்பக்கதி பரவசம் உள்ள அருட்ப் பாடல்வினை தீர்க்கும் நாயகனே {காணொளி இணைப்பு}