siruppiddy

புதன், மார்ச் 01, 2023

பிறந்தநாள் வாழ்த்து திருமதி றாதா றாதா 01.03.2023

யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட  திருமதி  றாதா றாதா  (ராதா  )
அவர்களின் பிறந்த நாள் .01-.03-2023 .இன்று
இவரை அன்பு கணவர்  அன்புப்பிள்ளைகள் சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்முருகன் மத்தனை காளி அம்மன்  பூவடி வயிரவர் 
 இறைஅருள் பெற்று  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு
தேவதை ஒன்று
இறங்கி வந்த நாள்!!..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கிஇனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், அக்டோபர் 24, 2022

இருளகன்று ஒளிவெள்ளம் பெருக இணைய வாசகர்களுக்கு என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்துக்களால்24-10-2022.திங்கள்கிழமை 
 இன்று கொண்டாடப்படுகின்றது.
அனைவரினதும் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்!
தீபத்திருநாளை கொண்டாடும், உலகம் எங்கும் பரந்து வாழும் எமது வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில்
எனது இந்த இணையயங்களும்  பெருமை கொள்கின்ற
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, அக்டோபர் 23, 2022

வடமராட்சியில் அமைந்துள்ள நாகர் கோயில் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகதம்பிரான்.

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள நாகர் கோயில் ஆலயத்தில்  இன்றைய தினம்  காட்சி கொடுத்த நாகதம்பிரான்.புதுமைகள் பலபுரியும் வடமராட்சி  நாகர் கோயில் ஆலயத்தில் நாகதம்பிரான் காட்சி கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது
பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, ஆகஸ்ட் 05, 2022

எங்கே பணத்தை வைக்கிறீர்கள் இந்த தவறுகளை செய்தால் வீட்டில் செல்வம் தங்காது

பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்களது இருக்கை ஆனது வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக் 
கொள்வது நல்லது.
பணம் வைப்பதற்கான மிகச்சரியான திசை என்றால் வடக்கு திசை தான். அறையின் 4 மூலைகளில் கட்டாயம் பணத்தை வைக்கக்கூடாது. அதாவது வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற மூலைகளில் பணத்தை வைப்பது கூடாது. தெற்கு திசையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது பணம் வைத்திருக்கும் இடமானது நுழைவு வாயிலை பார்த்தவாறு கட்டாயம் இருக்கக் கூடாது. வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்கவேண்டும்.
அதேபோல் பூஜையறையில் சிலர் பணத்தை வைத்திருப்பார்கள். இதுவும் தவறான முறையாகும். பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். பூச்சிகள் வரும்படி
 விட்டுவிட கூடாது.
பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் பேர்ஸிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருங்கள்.
பணம் என்பது நிலையான ஒரு பொருள் அல்ல. இன்று இருக்கும் நாளை இல்லாமல் போகும்.
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சம்பாதிக்கும் பணம் வீண் போவதில்லை. ஈட்டிய செல்வத்தை நிலைக்குமாறு வழி 
செய்து கொள்ளுங்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வெள்ளி, ஜூலை 22, 2022

ஆலயத்தில் கோவில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது.கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் 
கூறியிருக்கின்றனர்.
இவ்வாறு பல சந்தேகங்களுக்கான பதிலை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன் பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.
கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் 
அது உண்மை அல்ல.
ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி 
இருக்கிறது.
கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன் கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம்,
துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள்
 தான் காரணமாகும்.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு
 வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து,விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் 
நிம்மதியை அளிக்கிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
வெள்ளி, ஜூலை 15, 2022

நீங்கள் ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி பெறலாமாம்

இன்றைய தலைமுறையைச் சார்ந்த பலரின் எண்ணம் என்னவென்றால் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்பதே. ஆனால் இறை அருளை பெறுவதென்பது அத்தகைய எளிதான
 விடயம் இல்லை.
ஆனால் இல்லாதவர்களுக்கு தானம் செய்வதின் மூலம் இறை அருளை கூட எளிதில் பெறலாம். ஒரு ரூபாய் தானம் செய்து ஒரு கோடி ரூபாய் பெறுவதெப்படி என்பதை பற்றி இப்போது
 பார்ப்போம்.
வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்று பெயர். அந்த நாளில் காலையில் எழுது குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று துளசி அர்ச்சனை செய்வது பல 
நன்மைகளை தரும்.
அதோடு அன்றைய தினத்தில் பணத்திற்காக கஷ்டப்படும் எழமானவர்களின் கல்விக்கு உதவும்படியாக ஒரு ருபாய் தானம் செய்தாலும் அது பல கோடிகளாய் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதே போல் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கி 
புண்ணியம் பெருகும்.
அதோடு புத்தி கூர்மையடையும். இந்த மாபெரும் ரகசியத்தை ராமபிரான் அவரது குல குருவான வசிஷ்டரிடம் கேட்டறிந்ததாக 
புராணம் கூறுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
வெள்ளி, ஜூலை 08, 2022

எம் வீட்டிற்கு தெய்வ சக்தியை கொண்டு வருவது எப்படி தெரியுமா

பொதுவாக எல்லோரும் தங்களின் வீட்டில் தெய்வம் குடிகொண்டாள் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோம். அந்த எண்ணத்திற்கு பின்னால் பல சுயநலன்கள் அடங்கியுள்ளது என்பது வேறு விடயம்.
வீட்டில் சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும் 
அதேபோல் சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும். உங்கள் வீட்டில் என்ன செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் 
பார்ப்போம் வாருங்கள்.
நீங்கள் புதிதாக குடிபோகும் எந்த ஒரு வீட்டிற்கும் தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டுசெல்வது அவசியம். மனிதர்களைக் காட்டிலும் பறவைகளிடம் இந்த 
ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.
வீட்டில் சிட்டுக்குருவி, புறா, அணில் போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது என அறியப்படுகிறது.
உங்கள் வீட்டு வாசலிலோ இல்லை ஏதாவது சந்திலோ 
தானியங்களை பரப்பி வைத்தால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு
 பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
புறா, குருவி போன்ற ஜீவசக்தி கொண்ட ஜீவன்கள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு
 கெட்ட சகுனமாக அமையலாம்.
புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை மிரட்டவோ விரட்டவோ வேண்டாம். இவை உங்கள் வீட்டிற்கு வந்து போவதால்
 நன்மையே நடக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>