siruppiddy

புதன், ஜனவரி 27, 2021

திருக்கல்யாணம் - முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத்திருவிழா கோலாகலம்

 தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் ஆலயங்களிலும் சிவபெருமான் ஆலயங்களிலும் 2021.தைப்பூசத்திருவிழா:சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, 
திருத்தணி, பழமுதிர்ச்சோலை, 
சுவாமிமலை கோவில்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் சிவ ஆலயங்களிலும் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. பழனியில் 306 நாட்களுக்குப் பிறகு தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 
ஆறுமுகக்கடவுளான முருகப் பெருமானுக்கு 
தமிழ் மாதப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, சூரசம்ஹாரம், தைப்பூசம், மாசி மகம் மற்றும் பங்குனி உத்திரம் என மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வாடிக்கை.
 அதிலும் அறுபடை வீடுகளில் ஒவ்வொரு படைவீடுகளிலும் ஒவ்வொரு திருவிழா விமரிசையாக நடைபெறும். குறிப்பாக, 
முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா, இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் திருவிழா, மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா
 மற்றும் பங்குனி உத்திர திருவிழா என ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு விதமான திருவிழாவுக்கு பிரசித்து பெற்று 
விளங்குகிறது
தைப்பூசம் திருவிழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் உள்ள முருகன் ஆலயங்களில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆலயங்களிலும் திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான
 திருச்செந்தூரில், தைப்பூச விழாவைக் காண பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், கடலில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகையால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் 
பூண்டுள்ளது.
தைப்பூசம் கோலாகலம் தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த வாரம் கொடி 
ஏற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவை நாளை நடைபெறுவதை முன்னிட்டு பழநி, மற்றும் திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக சென்று 
கொண்டுள்ளனர்.
தங்க ரத புறப்பாடு மூன்றாம் படைவீடான பழனியில் நாளை தேரோட்டம் நடைபெறுவதைக் காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியை நோக்கி பாதயாத்திரை செல்கின்றனர். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்க ரத புறப்பாடு 306 நாட்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
தைப்பூச தேரோட்டம் இன்றைய தினம் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. பழனி முருகனைக் காணவும் தைப்பூச தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரை வந்து கொண்டிருக்கின்றனர்.
காவடி சுமந்த பக்தர்கள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முருக பக்தர்கள் அனைவரும் பாதயாத்திரையாக சென்று கொண்டுள்ளனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற நீளமான அலகுகள் குத்திக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரை நோக்கி வந்த 
வண்ணம் உள்ளனர்.
முருகனை காண வரும் பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில்.27-01-2021. இன்று தைப்பூச திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்துச் சென்றனர். இதேபோல 
திருப்பரங்குன்றம், சுவாமிமலை,பழமுதிர்சோலையிலும் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளைய தினம் அரசு பொது விடுமுறை
 அறிவித்துள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமான் ஆலயங்களில் சாமி தரிசனம் செய்வார்கள் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.,

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>>











<<<

வெள்ளி, ஜனவரி 15, 2021

நேரில் சிவபெருமானை கண்ட ஆங்கிலேய அதிகாரி

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது.
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை
 தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து 
கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி 
கடிதம் வராதது கண்டு துயருற்றார். ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த
 வேதியர்களைக் கண்டார். துயருற்ற முகத்தைக் கண்ட வேதியர்கள் காரணத்தைக் கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து 
அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தைத் தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.
கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தைப் புதுப்பித்துத் தருவதாக வேண்டிக் கொண்டு வீடு திரும்புகிறார். லகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கி சரியாகப் பதினோராம் நாள் செய்தி 
கொண்டு வருபவர், கர்னலிடமிருந்து செய்தியைக் கொண்டு வருகிறார். அதில் எழுதி இருந்தது "போர்க்களத்தில் இருந்து
 தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்துப் புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர். நாங்கள் தப்பிச்செல்ல
 இயலாதவாறு சிக்கிக் கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே 
சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய 
இந்திய துறவியைக் கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார். மேலும், அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும், அவர் தனது
 கையில் இருந்த அந்த ஆயுதத்தைக் கையாண்ட விதமும் மகத்தான விதமாக 
இருந்தது. இந்த சிறந்த மனிதனைக் கண்ட 
எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்தத் துறவியின் கருணையினால் தோல்வியைத் தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியைப் பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமானதன் காரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை
 உடைய கூறிய ஆயுதமே. அந்த உன்னதத் துறவி 
என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 
காக்க வந்ததாகவும் கூறினார்.
இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார். சில வாரங்களுக்குப் பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவர் நடந்தவற்றை 
விவரித்தார். கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர். 1883 ஆம் ஆண்டு 
கர்னல் மற்றும் அவர் மனைவி 16000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர். இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.
பன்னீர் செல்வம்> சதுரகிரி அவர்களின் முகநூல்
 சுவரிலிருந்து

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>