siruppiddy

புதன், ஜூன் 29, 2022

யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்


யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது.29-06-2022. இன்றைய தினம்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதன் ஒரு அங்கமாக, நேற்று(28) காலை விநாயகர் வழிபாடு, நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு தலைமையில் சிவாச்சாரியார்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக விளங்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த பெருந்திருவிழா இன்று புதன்கிழமை பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் உற்சவம் நிகழவுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
வெள்ளி, ஜூன் 17, 2022

பசுவை வீட்டிற்குள் புதுமனைப் புகுவிழாவில் அழைத்து வருவதன் காரணம்

முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு. அதனால்தான் பசுவை குருவின் அம்சம் என்று சொல்வார்கள். பிரகஸ்பதி, குரு மாறுகிறாரே அதனுடைய அம்சம் பசு. பசுவின் கொம்பில் இருந்து, கண் இமையிலிருந்து, வாய் நுனி வரைக்கும் அத்தனையிலும் தேவர்களும், மூவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவதை குடியிருக்கிறார். அதனால் பசுவை பின் பக்கத்தில் தொட்டுக் கும்பிடுவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகட்டும் என்பதற்காக. காரணம், பசு தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியல்பூர்வமாக பார்க்கும் போது கிருமி நாசினியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 
நல்ல பசும்பால் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு சமமாக உள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு சிறந்த உணவாகவும் 
அது அமைகிறது.
அதனால்தான் பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.
தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால், அந்த பசுஞ்சாணம் தெளித்த இடத்தில் ஒரு செழிப்பு தெரியும். அதனால்தான் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் பசுஞ்சாணத்தை தெளித்து, மெழுகி செய்வார்கள். இன்னும் சிலர் பசுஞ்சாணத்தை உருட்டி அதன் மீது விளக்கேற்றுவார்கள். பிள்ளையாரையும் பசுஞ்சாணத்தால் பிடித்து அதன் மீது அருகம்புல் செருகி மந்திரங்களை சொல்லும் போது உடனடியாக நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும்.
இதுபோல பசுவினுடைய அத்தனையும் நமக்கு எல்லா வகையிலும், எல்லா விதத்திலும் பயன்படுகிறது. பசுவிற்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எல்லா தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி உண்டு. இந்த மாதிரியான தெய்வ அமைப்பு பசுவிற்கு மட்டும் அமைந்துள்ளது. தற்பொழுது
 இவர்கள் ஜெர்சி பசுவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை. நம்ம நாட்டுப் பசு, அதற்கும் முன்பாக பார்த்தால் காராம்பசு.என்னுடைய தாத்தா காலத்திலெல்லாம் காராம் பசுக்கள் நிறைய இருந்தது. காராம்பசுவினுடைய காம்புகளைப் பார்த்தால் சிறியதாக இருக்கும். ஆனால் கறக்க கறக்க பால் வரும். அந்தப் பால் பணங்கற்கண்டு பால் போன்று இருக்கும். அப்படியே குடிக்கலாம். அதற்கடுத்து, அதற்கு சில தெய்வீக அமைப்பெல்லாம் உண்டு.
அதாவது, புல் பூண்டுகளைக் கூட தேர்ந்தெடுத்துதான் மேயும். நாட்டுப் பசுவிற்கும், காராம்பசுவிற்குமே அதிக வித்தியாசம் உண்டு. நாட்டுப் பசு எல்லா புற்களையுமே மேயும், ஆனால் காராம் பசு சில வகையானப் புற்கள், சில வகையான இலைகள் மட்டும்தான் சாப்பிடும். மிகவும் சென்சிடிவானது. கோபத்துடன் தொட்டால் கூட சாப்பிடாது.
இந்த மாதிரியான தெய்வ லோக, தெய்வத் தன்மையுடைய பசுவெல்லாம் உண்டு. அதனால் பசு வீட்டிற்குள் வந்துவிட்டுச் செல்வது
 என்பது நல்லது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
வெள்ளி, ஜூன் 10, 2022

நாம் விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன தெரியுமா

கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில்
 இருக்கிறது. 
இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து  காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
திருநீறு பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை வெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும். முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி  நிறைய 
பூசவேண்டும்.
நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கி 
பெறுதல்  வேண்டும்.
வடக்கு கிழக்குமுகமாக நின்று தான் திருநீறு பூசவேண்டும். தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும்  பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.
விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து வைக்கக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.
வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

வெள்ளி, ஜூன் 03, 2022

சுமங்கலிப்பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு 
சேமத்தைக் கொடுக்கும்.
சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப்பெருக்கும்.
* குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
* பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
* அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
* தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக
 நன்மைகள் உண்டாகும்.
* திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
*  கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த 
துணிவைக் கொடுக்கும்.
* குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை
 ஊக்குவிக்கும்.
* சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் 
சுயக்  கட்டுபாட்டிற்கு நல்லது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>