siruppiddy

ஞாயிறு, டிசம்பர் 29, 2019

பிறந்த நாள் .வாழ்த்து திருமதி வன்னிய சிங்கம் துளசி 29.12.19

யாழ்  தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும்  கொண்ட திருமதி வன்னிய சிங்கம்   துளசி 
அவர்களின்   பிறந்த நாள் . 29.12.2019..இன்று இவரை அன்புப் பிள்ளைகள்
 மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று நோய்நொடிஇன்றி  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

சனி, நவம்பர் 09, 2019

பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை. 9.11.2019 இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார்
 அம்மம்மா
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
 நவற்கிரிமாணிக்க ஸ்ரீ  பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






செவ்வாய், அக்டோபர் 01, 2019

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.19

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.
திரு .திருமதி. சாந்தகுமார்.(குமார் &கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் ஏழாவது பிறந்தநாள்.01.10. 2019. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில்
குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடினார்  இவரை அன்பு அப்‌பா அம்மா அன்புத்தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
பெரியப்பாமார் பெரியம்மாமார்.
சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று ,பல் கலைகளும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சீரும்சிறப்புடன் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம்.நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், செப்டம்பர் 12, 2019

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது மூன்றாவது .
பிறந்த நாளை 12.09.2019. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும். நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்    

அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்  ...... 
  ......
   வாழிய நீ பல்லாண்டு 
பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு 
அந்த எல்லாம் வல்ல இறையருளோடு 

என உளமார ..... வாழ்த்துகின்றோம்  ...... 

இங்ஙனம் உன் அன்பு .
.ஐயா அப்பாம்மா ...
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





சனி, ஜூன் 22, 2019

யாழ் மருதனார்மடம் திருவருள் மிகு ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேர்த் திருவிழா

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் இணுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது.பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும்
, அனைவராலும் பெருமை மிக்க ஆலயமாக ஆஞ்சநேயர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலின் இயற்பெயர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி தேவஸ்தானம் ஆகும். இந்த ஆலயத்தின் சிறப்பை எடுத்தியம்பும் வகையில் காணப்படுவது இந்த கோவிலின் வளாகத்தின் 
முகப்பில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இந்த ஆஞ்சநேயர் சிலையே.72 அடி உயரமுடைய குறித்த சிலையானது 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பதோடு மருதனார்மடம் பகுதிக்கு 
உட்பட்ட எங்கிருந்து பார்த்தாலும் காணக்கூடிய வகையில் அமைந்திருப்பதே இந்த சிலையின் தனித்துவமாகும்.சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர். அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக
 அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் அமைக்கப்பட்டது.மருதர்பெரும்பதி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி அமைப்பதற்கு எண்ணிய போது பெருமைக்குரிய அருட்கவி சி.வினாசித்தம்பி அவர்களால் இப்பதிமீது பாடப்பெற்ற முதலாவது பாடல் பின்வருமாறு அமைகின்றது
”சிந்தனைக் கரியோனாகிச்
சிவனுருத் தாங்கி இராம
மந்திரமூர்த்தியாகி வருமடி யாருக்கெல்லாம்
பந்தனை நீக்கி வேண்டும்
பலனெலாம் கொடுக்கும் செல்வச்
சுந்தரஆஞ்சனேய
சுவாமியே போற்றி போற்றி…..”
என இங்கு அமையப்பெற்றுள்ள குறித்த ஆஞ்சநேயர் திருவுருவம் குறித்து அருட்கவி சி.வினாசித்தம்பியால் குறித்த பாடல் முதலாவதாக பாடப்பட்டது.ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் , அழகனாய் கோலம் கொண்டு காண்பவர் கண்ணுக்கெல்லாம் கண்கொள்ளா காட்சியாக அமைந்து காணப்படுகின்றது. இத் திருவுருவத்தில்
 தியானத்தின் மேன்மைக்காக கண்மலா் மூடிக்காணப்படுகின்றது. அத்துடன் அருட்பெரும் கரத்தைக் கூப்பி இதயமேல் அணைவுசெய்து கோலமாம் கோலங்கொண்டு காட்சியளிக்கின்றது.
அத்துடன் வடிவுடை மன்னனாகி சிரசின்கண் அழகு முடியும் , மார்பினில் வண்ணக்கோல நறுமண மாலைகளும் அணிந்து காணப்படுகின்றது. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் பக்த அடியவனான திரு வ. சிவநேசன் அவர்களின் கலியுகம் காக்கும் செல்வன் எனும் தலைப்பில் அமைந்த பாடல் மூலம் இவ் ஆஞ்சநேயரின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.இந்நிலையில் இலங்கையின்
 தனித்துவத்தையும், தமிழர்களின் பண்பாட்டையும், வரலாற்றையும் எடுத்தியம்பும் பெருமை மிக்க ஆலயமாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் விளங்குகின்றது.ஆஞ்சநேயர் கோவிலின் முகப்பில் இருக்கும் அனுமான் சிலையானது மருதனார்மடத்திற்கே அடையாளமாக விளங்குகின்றது. 72 அடி உயரமான இந்த சிலையானது 2013 இன் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது.இது 
இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது. மருதனார்மடத்திற்கு உட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.ஆலய வரலாறு:ஒரு குருவும் சீடனுமாக இருவர் இராம நாமத்தை ஓதி ராமசக்கரத்தை வழிபட்டு வந்த இடமே கோவில் அமைந்திருக்கும் இடம் என நம்பப்படுகின்றது. இக்கோவில் 22.04.1999 இல் தொடங்கி வைக்கப்பட்டு 29.01.2001 இல் மகாகும்பாபிடேகம் நடைபெற்றது.ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம்
 இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இணுவில் மருதனார்மட திருப்பதியில் நிறுவப்பட்டது.இக் கோவிலில் 
காலை மதியம் மற்றும் அந்தி நேர பூசைகள் வழமையாக நடைபெறுவதுடன் சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகின்றன. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவத்திற்கான கும்பாபிடேகத்தின் பின்னர் 18 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதன் 
கும்பாபிடேகம் 09.02.2005 இல் நடைபெற்றது. துதிப்பாடல்:
உருத்திர மூர்த்தம் கொண்ட சுந்தர ஆஞ்சநேயன்
தூலமாம் லிங்கமாகிக் கோயிலின் வாசல் முன்னே
மாமலை போன்ற வண்ணக் கோபுரம் மேலே நின்று
ஆசியை வழங்கும் காட்சி காண்பவர் மேலோர் தாமே
இயற்கையின் வனப்புக் கொண்ட தெய்வீகச் சூழல் தன்னில்
குடியென்ன அமர்ந்த எங்கள் சுந்தர ஆஞ்சநேயன்
தனெக்கெனக் கோயிலகிக் அற்புதக் கோலத்தோடு
கோபுரம் மேலே நின்றான் 
குடிமுழு தாள என்றே
கோபுரம் லிங்கமாக மருங்கினில் நாதம் சேர
காண்பவர் மனதில் இராமன் தோற்றமாய் வந்து நிற்க
கோபுர நடுவில் அனுமன் நின்றிடும் கோலம் காண்போம்
குடமுழுக்கு காடி ஐயா குடி முழு தாண்டு எங்கள்
குலமது நிமிர்ந்து வாழ நாட்டினில் அமைதி சேர
இயற்கையின் அனர்த்தமின்றிக் நோய்பிணி இன்றி வாழ
ஆசியை வழங்கி எம்மை ஆண்டிடும் ஐயா போற்றி இந்த தகவலையும் தயவு செய்து படியுங்கள்…ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா!
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஞாயிறு, ஏப்ரல் 14, 2019

இனிய தமிழ் சித்திரை புது வருடநல் வாழ்த்துக்கள்.14.04.19

அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள்
இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தமிழ் ஆண்டுகளில், விளம்பி  ஆண்டு முடிந்து விகாரி ஆண்டு.14.04.2019 இன்று ஞாக்கிழமை பிறந்தது.தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது தமிழ் புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>








வெள்ளி, ஏப்ரல் 12, 2019

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.08.04.19

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க
பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தேர் திருவிழா. 14ம் நாள் பகல். 08.04.2019 திங்கட்க்கிழமை இன்று.

அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் திருத் வீதி தேரில் உலா வந்தார் 
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, மார்ச் 29, 2019

அறிவியல் உண்மை ஏன் நாங்கள் திருநீறு அணிவது

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில்நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாகநிகழ்கிறது. 
அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும்விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் 
இருந்துவருகிறது. 
பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்தகலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு.
விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும்,
 பலன்களும்
1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2. தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச்சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் 

சூட்சுமம் அங்கு உள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், மார்ச் 26, 2019

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 1ம் திருவிழா கொடியேற்றம் ,26,03,19

இலங்கைத்திரு  திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
கொடி ஏற்றந்திருவிழா 26,03,2019. இன்று. ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், ஜனவரி 14, 2019

பொங்கும் மங்களம் எங்கும் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துகள்

ஜனவரி 15 : சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை எனும் வள்ளுவப் பேராசானின் குறள் மொழிக்கேற்ப, உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற தொழில்கள் பல செய்து வந்த போதும், உழவுத் தொழில் தான் முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும்
 போற்றப்படுகிறது.
இத்தகைய பெருமைக்கும், புகழுக்கும் உரிய உழவர் பெருமக்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் பெருவாழ்வு மனமகிழ்ச்சியையும், அவர்தம் வாழ்க்கை சிறந்திடவும் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  உலகத் தமிழர்கள் அனைவரும் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும், உவகையுடனும் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.
ஜாதி, வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்து நின்று பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில், புதுநெல்லு, புதுப்பானை, கரும்பு, மஞ்சள், வாழை என விளைந்த பொருட்களை வைத்து “பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனையும், இயற்கையையும் வணங்கி கொண்டாடும் திருநாள் பொங்கல் பண்டிகை என்னும் நன்நாள் ஆகும்.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
இந்நாளில் மக்கள் வீடுமுழுக்க மாக்கோலங்களும், வாசலில் வண்ணப்பொடிகளால் கண்களைக் கவரும் வண்ணக் கோலங்களும் இட்டு சூரியனை வரவேற்கிறார்கள். பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திட வாசலில் மாவிலை, ஆவாரம்பூ, வேப்பிலை, கூரைப்பூ என்னும் கண்ணுப்பிள்ளை போன்றவற்றை காப்பாக முடிந்து நிலைப்படியில் கட்டுகிறார்கள். வாசலின் இருபுறமும் தித்திக்கும் கரும்பையும் கட்டி வைப்பர். பொங்கல்பானையில் மங்களத்தை குறிக்கும் வகையில் மஞ்சள் கிழங்கினையும், இலையும் சுற்றுவர்.
செங்கதிரோன் கீழ்வானில் வரும் இளம் காலைப் பொழுதில் நீராடி, புத்தாடை உடுத்தி வாசலில் பொங்கலிடுவதும், சின்னஞ்சிறு குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து பொங்கல் பொங்கும் போது “”பொங்கலோ பொங்கல்” என்று ஆர்ப்பரிப்பதும் பொங்கலுக்கே உரியவையாகும். சுமங்கலிகள் குலவையிட்டு தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். சிலர் பொங்கல் பொங்கும் போது மங்களச் சின்னமான சங்கினை முழங்குவார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் இப்பழக்கம் காணப்படுகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும்’  என்பதுபோல் இதுவரை நாம் அனுபவித்து வந்த துன்பங்கள் அனைத்தும் மறைந்து நம் வாழ்வில் இன்பங்கள் பெருக வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம். பொங்கல் பொங்கட்டும் தமிழர்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும். அனைவருக்கும் தி மலேசியன் டைம்ஸ்-சின் இனிய பொங்கல்
 நல்வாழ்த்துகள்..

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம செய்தி >>>