siruppiddy

திங்கள், பிப்ரவரி 24, 2020

ஏழரைச் சனியிடம் சிக்கிய ராசிக்கு காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்

மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர
 நிலையில் இருக்கிறார்.இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.விருச்சிக ராசி:விருச்சிக ராசிக்கு 
கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் 
வீட்டில் சூரியன் புதன், இரண்டாம் வீட்டில் கேது, செவ்வாய், குரு, மூன்றாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் சுக்கிரன் என 
கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 
சனி சந்தோஷமாக 
இருக்கிறார்.மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். பிசினஸ் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மாத 
தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க.தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வம்பு வழக்குகளை 
தவிர்த்து விடுங்கள்.
மார்ச் 22ஆம் திகதி உங்க ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று உச்சம் பெற்று அமரப்போகிறார்.மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனியோடு செவ்வாய் உச்சம் பெற்று இணைகிறார். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாகும்.புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை
 மேஷம் ராசியில் இருக்கும் சுக்கிரன் மீதும் விழுவதால் காதல் மலரும். காதல் உறவில் கவனம் தேவை
குரு பகவான் மாத இறுதியில் அதிசாரமாக மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. மாத இறுதியில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு 
சென்று சஞ்சரிக்கும் காலத்தில் சந்தோஷம் அதிகமாகும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் இந்த மாதம் நீங்க ரொம்ப 
பொறுமையாக இருங்க.
நிதானமாக இருந்தால் நிறைய நல்லது நடக்கும் ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை
 இந்த மாதம் வேண்டாம்.
தனுசு ராசி:மார்ச் மாதம் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் குரு, கேது, செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, சூரியன்,புதன் 3ஆம் வீட்டிலும் சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்
.ராகுவின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் இருக்கிறது. இந்த மாதம் உங்க ராசிக்கு யோகம் தரக்கூடிய புதன் வக்ர 
நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார்.வேலையில் நல்ல மாற்றம் வரும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். சூரியன் உ
ங்க ராசிக்கு மாத முற்பகுதியில் முயற்சி ஸ்தானமான 
மூன்றாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் 
நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.பாக்ய ஸ்தான அதிபதி 
சூரியன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சுகங்களை கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு சாதகங்களை செய்ய மாட்டார். என்றாலும் செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக 
இருப்பது அவசியம்.
மாத இறுதியில் குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். சுப பேச்சுக்கள் ஆரம்பிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக நடைபெறும்.குடும்பம் குதூகலமாக இருக்கும். தடைகள் இடைஞ்சல்கள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு 
நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம்.நினைவாற்றல் அதிகமாகும். உயர்கல்வி
 படிக்க யோகம் வரும். மாத பிற்பகுதியில் நிறைய நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். உடல் உபாதைகள் நீங்கும். மார்ச் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான மாதமாக அமையும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், பிப்ரவரி 10, 2020

பிறந்தநாள் வாழ்த்துதிரு திரு மதி இன்பமோகன் -09.02.20

யாழ் புனகரியை   பிறப்பிடமாகவும்
  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன்  .அவர்களின் ;
 பிறந்தநாள். 09.02.2020.இன்று.  இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும் 
  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, பிப்ரவரி 08, 2020

யாழ் நல்லூர்க் கந்தனுக்கு 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா

தைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா 
07.02.20. காலை இடம்பெற்றது.
நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள
 வயலுக்குச் செல்வார்கள் .
அங்கு வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் 
இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தப் புதிர் எடுக்கும் விழா 286ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை 
குறிப்பிடத்தக்கது.நிலாவரை.கொம் செய்திகள் >>>