siruppiddy

வெள்ளி, ஜூலை 22, 2022

ஆலயத்தில் கோவில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது.கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் 
கூறியிருக்கின்றனர்.
இவ்வாறு பல சந்தேகங்களுக்கான பதிலை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன் பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.
கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் 
அது உண்மை அல்ல.
ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி 
இருக்கிறது.
கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன் கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம்,
துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள்
 தான் காரணமாகும்.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு
 வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து,விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் 
நிம்மதியை அளிக்கிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூலை 15, 2022

நீங்கள் ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி பெறலாமாம்

இன்றைய தலைமுறையைச் சார்ந்த பலரின் எண்ணம் என்னவென்றால் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்பதே. ஆனால் இறை அருளை பெறுவதென்பது அத்தகைய எளிதான
 விடயம் இல்லை.
ஆனால் இல்லாதவர்களுக்கு தானம் செய்வதின் மூலம் இறை அருளை கூட எளிதில் பெறலாம். ஒரு ரூபாய் தானம் செய்து ஒரு கோடி ரூபாய் பெறுவதெப்படி என்பதை பற்றி இப்போது
 பார்ப்போம்.
வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்று பெயர். அந்த நாளில் காலையில் எழுது குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று துளசி அர்ச்சனை செய்வது பல 
நன்மைகளை தரும்.
அதோடு அன்றைய தினத்தில் பணத்திற்காக கஷ்டப்படும் எழமானவர்களின் கல்விக்கு உதவும்படியாக ஒரு ருபாய் தானம் செய்தாலும் அது பல கோடிகளாய் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதே போல் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கி 
புண்ணியம் பெருகும்.
அதோடு புத்தி கூர்மையடையும். இந்த மாபெரும் ரகசியத்தை ராமபிரான் அவரது குல குருவான வசிஷ்டரிடம் கேட்டறிந்ததாக 
புராணம் கூறுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூலை 08, 2022

எம் வீட்டிற்கு தெய்வ சக்தியை கொண்டு வருவது எப்படி தெரியுமா

பொதுவாக எல்லோரும் தங்களின் வீட்டில் தெய்வம் குடிகொண்டாள் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோம். அந்த எண்ணத்திற்கு பின்னால் பல சுயநலன்கள் அடங்கியுள்ளது என்பது வேறு விடயம்.
வீட்டில் சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும் 
அதேபோல் சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும். உங்கள் வீட்டில் என்ன செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் 
பார்ப்போம் வாருங்கள்.
நீங்கள் புதிதாக குடிபோகும் எந்த ஒரு வீட்டிற்கும் தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டுசெல்வது அவசியம். மனிதர்களைக் காட்டிலும் பறவைகளிடம் இந்த 
ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.
வீட்டில் சிட்டுக்குருவி, புறா, அணில் போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது என அறியப்படுகிறது.
உங்கள் வீட்டு வாசலிலோ இல்லை ஏதாவது சந்திலோ 
தானியங்களை பரப்பி வைத்தால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு
 பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
புறா, குருவி போன்ற ஜீவசக்தி கொண்ட ஜீவன்கள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு
 கெட்ட சகுனமாக அமையலாம்.
புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை மிரட்டவோ விரட்டவோ வேண்டாம். இவை உங்கள் வீட்டிற்கு வந்து போவதால்
 நன்மையே நடக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, ஜூலை 03, 2022

நாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு படையெடுக்கும் பக்தர்கள்

 

ன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு  03-07-2022-இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.இன்றைய தினம்(3) திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கரையில் ஆறுமுக நாவலருக்கான சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள் நுழையும் வீதியில் சுமார் 28 அடி நீளமான சிவன் சிலையும் வைபவ ரீதியாக திறந்து 
வைக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பக்த அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.தொடர்ந்தும் நாளை திங்கள் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நிறைவடையும்.
பின்னர் கிரிகைகள் இடம் பெற்று 6 ஆம் திகதி புதன்கிழமை காலை சுப முர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா 
இடம்பெற உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, ஜூலை 01, 2022

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொடியேற்றம் 01.07.2022

சுவிற்சர்லாந்து  சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ திருவிழா நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2053 சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) வெள்ளிக்கிழமை முதல்
 ஆனித்திங்கள் 28ம் நாள் (12.07.2022) செவ்வாய்க்கிழமை வரை வருடாந்த பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது
.01.07.2022 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்ற
 பூசை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அடியவர்கள் இவ்விழாகாலங்களில் ஆசாரசீலர்களாக வருகைதந்து,  எம் பெருமானின் அருள் பெற்று 
நலமுடன் வாழ்வீராக

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>