siruppiddy

ஞாயிறு, டிசம்பர் 03, 2017

நாம் கோயிலுக்கு செல்ல முன்பு இவற்றை கடைப்பிடித்தால் பலன் உண்டாகும் ?

கோவிலுக்கு புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு, சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பிரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி, பின் அடுத்ததைத் துவங்கவும்.
கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்றவேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்றவேண்டாம். அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் 
உண்ணவும்.
பரிகாரம் செய்தபின் பூஜைப் பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் 
கொடுக்கலாம்.
போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே
 முன்னின்று செய்யவும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், செப்டம்பர் 20, 2017

கொலு பொம்மைகளை நவராத்திரியின்போது எந்த முறையில் வைக்கவேண்டும்?


குறிப்பாக தமிழகத்திலும், ஆந்திராவிலும் கொலு வைத்து வணங்குவது பாரம்பரியமாக தொடர்கிறது.வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வணங்குதலோடு தினம் சுமங்கலி பெண்களுக்கு உணவு படைப்பது செல்வத்தை அளிக்கும்.
புழுவாகவும், மரமாகவும் அவதரித்து மனிதனாகி இறுதியில் இறைவனடி சேர்வோம் என்பதுதான் இதன் தத்துவம். ஒன்பது அல்லது ஒற்றைப் படையில் வருவதுபோல் கொலு வைப்பது முறை. விநாயகரை வைத்த பின்தான் மற்ற பொம்மைகளை வைப்பது ஐதீகம்.
முதல் படியில்: ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.
இரண்டால் படியில்: இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற 
பொம்மைகள் வைக்க வேண்டும்.
மூன்றாம் படியில்: மூவறிவான கரையான், எறும்பு போன்ற 
பொம்மைகள் வைக்க வேண்டும்.
நான்காவது படியில்: நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள்
 வைக்க வேண்டும்.
ஐந்தாம் படியில்: ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள் போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஆறாம் படியில்: ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.ஏழாம் படியில்; சாதரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
எட்டாம் படியில்: தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்ச பூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படியில்: முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில் சரஸ்வதி-லட்சுமிக்கும் நடுவில் சக்திதேவி இருக்க வேண்டுமாம்.
ஒன்பது படிகள் இயலவில்லை எனில் ஒற்றை படை எண்களில் அமைக்கலாம். இந்த வழக்கம் முந்தையா மன்னர் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>செவ்வாய், செப்டம்பர் 12, 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.17 .

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது நான்காவது  .
பிறந்த நாளை 12.09.2017. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார்  .இவரை அன்பு அப்பா அம்மா  அன்புத்தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்சான்   மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்  ற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழிய
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்குயை  அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம் 
   வாழிய நீ பல்லாண்டு ..
நிழல் படங்கள் இணைப்பு 
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, செப்டம்பர் 08, 2017

பலருக்கு தெரியாமலே இருக்கிற ஆன்மீகத்தில் பஞ்சகவ்யம்

நம்மில் பலருக்கு இந்த பஞ்ச கவ்யம் என்பது தெரியாமலே இருக்கிறது.
 முடிந்தவரை நம்மவர்கள் மக்களுக்கு இதைத் தெரிவிக்கவும். பஞ்சகவ்யத்தை பலவாராக சொல்வதாகக் கேள்விப்பட்டேன். என் குருநாதர் ஒருவர் சொன்ன விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. இது முற்றிலும் சரி என்றே எனக்குப் பட்டது.
பஞ்சகவ்யம் என்பது என்ன? பசும்பால், நெய், கோமியம், தயிர், பசுஞ்சாணம். இந்த ஐந்து கூட்டுப்பொருட்களே பஞ்சகவ்யமாகும். இதிலும் ஓரே பசுமாட்டின் சாணம், நெய், தயிர், பால், கோமியம் என்று இருப்பதுதான் சிறப்பு. அதுவும் நாட்டுப்பசுவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த நாட்டுப்பசுவில் இந்த கைகளை எடுத்து சேர்த்தால் 
அதன் மணமே தனி.
சரி இந்த பஞ்ச கவ்யத்தை எடுத்து என்ன செய்வது? தேவையாளவு எடுத்து (கூடுதல் குறைவாகவும் இருக்கலாம்) ஒன்றாகப் பிசைந்து அதை கால்கள் படாத இடத்தில் வைத்துக் காயவைக்கவேண்டும். (சிறு சிறு அளவாக உருண்டையாக) நன்றாக காய்ந்தபின் எடுத்து அதை தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு வீடுகளில், பூஜை அறையில் சாம்பிராணி தூபம் போடும்போது இந்த பஞ்சகவ்யத் தூள் சிறிதளவு அதில் போட்டு புகை காட்ட துஷ்ட தேவதைகளின் தொந்தரவு நிரந்தரமாக விலகும். இதன் பலனை அனுபவித்தால்தான் தெரியும். எதையும் அனுபவத்தில் பார்ப்பதுதான் சிறந்தது. இப்படிச் செய்கின்றவர்களின் வீடுகளில் உள்ளவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். 
இந்த தூபத்தை கோயில்களிலும் காட்டலாம். தெய்வங்களுக்கு இது மிகவும் உகந்தது. காமதேணுவில் இல்லாத தேவர்களும், தெய்வங்களும், உலகங்களும் இல்லை எனச் சொல்வார்கள். அப்படியிருக்க அந்த காமதேணுவின் அம்சமாக விளங்கும் பசுமாட்டின் பஞ்சகவ்யத்தை உபயோகிப்பதில் நன்மையே ஏற்படும்.
இன்னொரு விதமாகவும் செய்யலாம். காய்ந்த பஞ்ச கவ்யத்தை ஒரு சுத்தமான இடத்தில் கும்பலாக வைத்து, அதன் நடுவில் கற்பூரம் வைத்து கொளுத்திவிட அது புகைந்து எரிந்து சாம்பலாகும். அந்த சாம்பலில் எரியாமல் கரியாக உள்ளதை எடுத்துவிட்டு சாம்பலை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு அதை விபூதியாக நெற்றியில் 
பூசிக்கொள்ள என்னென்ன நல்ல பலன்கள் ஏற்படும் என்று மொத்தமாக சொல்லமுடியாது. பரம ஏழைக்கும் சுவையான உணவு கிடைக்கும். வலிமை இழந்தவன் வலிமை பெறுவான். இதை முழு நம்பிக்கையோடு செய்யவேண்டும். சிறிது அவநம்பிக்கைக் கொண்டாலும் பலன் குறையும். இது தெய்வங்களின் பொருள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். இந்த விபூதியில் சிட்டிகையளவு வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சில வகைப் பிணிகள் நீங்குவதாகச் சொல்கிறார்கள். நம்பிக்கையே வாழ்க்கை. வாழுங்கள் என்றும் வளமோடும்-நலமோடும்.
குறிப்பு-சிலர் இந்த விபூதியில் அவரவர் குலதெய்வத்தின் மந்திரத்தை உருவேற்றி வைத்துக்கொள்வார்கள். அப்படி செய்வதால் இன்னும் கூடுதலான நல்ல பலன்கள் கிடைக்கும்.
“ஓம் சிவ சிவ ஓம்”
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடம் இருக்கக் கூடாது . என்ன காரணம்?!


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

வெள்ளி, செப்டம்பர் 01, 2017

நூற்றாண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சில!

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்!!!
பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.
நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வன்னேமே உள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

சந்நிதிமுருகன் ஆலய கொடியேற்றத்தில் நடப்பது என்ன?

 தொண்டைமானாறு செல்வச்சந்நிதியின் கொடியேற்ற நிகழ்வு ஆகமம் சாராத பக்திசார் வழிபாட்டு மையமாக இருக்கும்  ஏனைய ஆலயக் கொடியேற்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாகும்..
ஆவணி மாத பூர்வபக்க பிரதமை கூடும் நேரத்தில் இங்கு கொடியேற்றம் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் இரவு 12.49 இற்கு அமாவாசை அற்றுப் போவதால் அதன் பின்னா் விடிகாலையில் கொடியேற்றம் என 
அறிவித்துள்ளனா்.
வைரவப் பெருமானுக்குக் காப்புக் கட்டிப் பின்னர் பிள்ளையார் பூசை மூலவரான வேலவருக்குப் பூசை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வான கேடகப் 
பூசை இடம்பெறும்
ஆலய வாயிலில் மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ள நந்திக்கு (இடபத்திற்கு) முன்பாக கேடயம் வைக்கப்பட்டிருக்கும் . (கேடகம் என்பது சுவாமியைக் காவிச்செல்லும் கூடு) கேடகத்தின் உச்சியில் உள்ள கலசத்தில் தருப்பை, ஏழு மாவிலைகள் என்பவற்றைப் பட்டுத் துண்டால் கட்டி பூசை இடம்பெறும். இதனைக் கலச பூசை என்கின்றனர். இதுவே கொடியேற்றத்தின் முக்கிய நிகழ்வு..
கொடியேற்றம் நிகழ்ந்ததன் அறிகுறியாக ஆலய வாயிலில் சேவல் கொடியைப் பறக்கவிடுவா் அதன்பின் எழுந்தருளி வேலவருக்குப் பூசை இடம்பெறும். அவரை கேடகத்தில் எழுந்தருளச் செய்து உள்வீதியுலா 
வரச் செய்வர்.
வள்ளி அம்மன் வாசலுக்கு எழுந்தருளி வேலவர் வந்ததும் அவரை வள்ளி அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து வேலவருக்கும் வள்ளி அம்மைக்கும் விசேட பூசை
 இடம்பெறும்..
தொடர்ந்து கேடகத்தில் எழுந்தருளி வேலவர் வெளிவீதியுலா வருவாா். கோவிலுக்கு வடக்குப் புறமுள்ள வாயிலில் (கதிர்காம வாயில்) தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து கும்பம் வைத்து அர்ப்பணிப்பா். நூற்றுக்கணக்கான தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைத்து அர்ப்பணிப்பா்.
அர்ப்பணங்கள் நிறைவுற்றதும் வேலவர் தனது சந்நிதானத்தை
 வந்தடைவார்.
சந்நிதியில் பூசை செய்பவர்களைப் பூக்காரர் என அழைப்பர். இவர்கள் வாய்கட்டியே பூசை செய்வர்..
பூசை முறை தமக்குத் தெரியாது என இவ்வாலயத்தைத் தாபித்த மருதர் கதிர்காமர் முருகப் பெருமானிடம் கோரியபோது முருகன் அவரை கண்மூடுமாறு பணித்ததாகவும் அடுத்த கணம் கதிர்காமத்தில் அவரை சேர்ப்பித்ததாகவும் அதன் மூலம் பூசை முறையையும் வேல் ஒன்றையும் அவர் பெற்றதாகவும் ஐதிகம் உண்டு.
முருகனும் கதிர்காமரும் உரையாடிய இடம் ஆலய முகப்பில் உள்ள நந்திக்கு அருகில் உள்ள இரண்டு குந்துகள் ஆகும். இந்த இரண்டு குந்துகளிலும் அவர்கள் எதிர் எதிர் இருந்து கதைத்தார்கள் என்ற நம்பிக்கையில் அக்குந்துகளில் எவரும் இருப்பதுவும் இல்லை. ஏன் அதற்குக் குறுக்கே போகக் கூடாது (அதாவது நேர் வாயிலால் கோவிலுக்குள் போகக்கூடாது) என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.
மூலவராக வேற்பெருமான் உள்ளார். இதைவிட அடியவர்கள் வழங்கிய வேல்களையும் இங்கு வைத்துள்ளனர்..
முருகனது உபதேசப்படி உப்பு இடாமல் 65 ஆலம் இலைகளில் வெண்பொங்கல் படைக்கப்படுகின்றது. இதுவே முருகனுக்கான பிரசாதம். இதனை மருந்து என்றுதான் அழைப்பர்.
சந்நிதியில் விபூதி வாங்கும் போது ஒரு கையால் வாயைப் பொத்தியபடி நிற்க பூசகர் விபூதியைப் பெறவேண்டியவருடைய சிரசில் விபூதியை தூவி நெற்றியிலும் பூசிவிடும் மரபும் உள்ளது.
மருதர் கதிர்காமர் முருகனிடம் தனக்கு விபூதி கொடுக்கத் தெரியாதே என்று கூறியபோது இப்படி விபூதியைக் கொடு என முருகன் வழிப்படுத்தினார் என நம்புகின்றனர். இதனால் அவரது சந்ததியினரும் அந்த மரபைப் பின்பற்றுகின்றனர்.
சந்நிதித் திருவிழாவையொட்டி வழமை போல சந்நிதியான் ஆச்சிரமத்தில் தினந்தோறும் அன்னதானம் மற்றும் ஆன்மீக உரைகள் 
 இடம்பெறவுள்ளன.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டிலும் ஆன்மீக நிகழ்வுகள் ஆலய வெளிவீதியில் மாலை மற்றும் இரவு வேளையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 20.08. 17

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில்  தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்
.வெகு விமர்சையாக 20.08.2017 இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள்.

உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக
 நடைபெற்றது 
அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
என்றுமில்லாத வகையில் யாழில் கூடியுள்ள பக்தர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும், காவடி எடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஆலயத்தை சுற்றியும் ஏராளமான பக்த அடியார்கள் காணப்படுகின்றார்கள். தேரைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தையும், வடம் பிடித்து தேரை இழுக்கும் காட்சிகளையும் பார்க்கும் போது 
மெய்சிலிர்க்க வைக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>
வெள்ளி, ஆகஸ்ட் 04, 2017

சிவனிடம் இந்த 12 பாவங்களுக்கு மன்னிப்பே கிடையாது தெரியுமா?

மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?
பாவம் – 1
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.
பாவம் – 2
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம் – 3
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது 
மகா பாவத்தில் அடங்கும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சனி, மார்ச் 25, 2017

பிறந்தநாள்வாழ்த்து பாடகர் திரு கணேஸ் (25.03.17)

யாழ்  திருேநல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ் அவர்கள் இன்று தனது 50வது  பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார்,  இவரை அன்பு மனைவி    அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் மற்றும்  ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில்
உற்றார்.உறவினர்களுடன் இவரை . இறை அருள் பெற்று என்றும் இன்பமாய்
எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>