siruppiddy

வெள்ளி, செப்டம்பர் 28, 2018

யாழ் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் சிறப்புக்களும்!

முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் தமிழர்களின் தனிப் பெரும் கடவுள். முருக வழிபாடு தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு வழிபாடாகும்.முருகு என்பதற்கு 
இளமை, இனிமை, அழகு எனப் பல்வேறு பொருள்கள் உண்டு. சரவணப் பொய்கையில் பிறந்தவன் ஆகையால் சரவணபவன் எனவும், கார்த்திகைப் பெண்கள் வளர்த்த காரணத்தால் கார்த்தித்திகேயன் எனவும், இளமையே வடிவான காரணத்தால் முருகனைக் குமரக் கடவுள் எனவும், தந்தைக்கே 
பிரணவப் பொருளை
உணர்த்தியவன் ஆகையால் சுவாமி நாதன் எனவும், யாவருக்கும் நன்மையே செய்பவன் என்ற காரணத்தால் சுப்பிரமணியன் எனவும், குன்றங்களெல்லாம் குடிகொண்ட காரணத்தால் குறிஞ்சிக் கடவுள் எனவும், கலியுகத்திலும் வேண்டுவார் வேண்டும் வரம் அருள்பவன் ஆகையால் கலியுக வரதன் எனவும் போற்றுகின்றோம்.
தென்னிந்தியாவில் ஆறுபடை வீடுகளில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகன் முருகப் பெருமானுக்கு திருமூலரால் சிவபூமி என போற்றிப் புகழப்பட்ட இலங்கைத் திருநாட்டிலும் பல திருக்
 கோயில்கள் உண்டு.
யாழ்ப்பாணத்தில் நல்லூர்க் கந்தசுவாமி, தொண்டமானாறு செலவச் சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகிய ஆலயங்கள் முருகப் பெருமானுக்குக்குரிய பிரசித்தி பெற்ற 
திருத்தலங்களாகவுள்ளன.
அத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம், வெருகல் சித்திர வேலாயுதர் ஆலயம் எனப் பல பழம் பெரும் முருகன் ஆலயங்கள் இலங்கையில் காணப்படுவது எமது நாட்டில் முருகப் பெருமானின் வழிபாடு தொன்மையான காலம் தொட்டு வழங்கி வருகிறது என்பதற்குத் தக்க சான்று பகரும் வகையிலுள்ளது.
ஈழத்திலே நல்லூர் என்ற பெயரிலே ஐந்து கிராமங்கள் உள்ளன. அவற்றிலே யாழ்.நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள நல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம். 12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகவும்,
இலங்கையின் வடபகுதியிலுள்ள தமிழர்களின் இராசதானியாகவும் விளங்கியது நல்லூர்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு “குருக்கள் வளவு” என்ற காணியில் 884 ஆம் ஆண்டளவில் கட்டியதாக கைலாய மாலை 
எனும் நூல் கூறுகிறது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் புவனேகபாகு தான் கட்டினான் என்பதற்கு ஆதாரமாக கைலாயமாலையில் வெளிவந்த பின்வரும் செய்யுளைக் குறிப்பிடலாம். இலகிய சகாத்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு 
நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே “ஆதியில் ஆலயத்தை நிர்மாணித்த ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு தற்போதும் மஹோற்சவ காலங்களில் கட்டியம் கூறும் போது
 ஆசிர்வதிக்கப்படுகின்றார்.
பதினாறாம் நூற்றாண்டின் நடுப் பகுதியான 1560 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1200 பேரைக் கொண்ட போர்த்துக்கீசக் கப்பற்படையினர் யாழ்ப்பாணக் களப்பில் வந்திறங்கினர்.
குறித்த கப்பற் படையினர் கரையில் நின்ற தமிழ்ப் படையுடன் போரிட்டு வென்று யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூர் இ
ராசதானியைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டு வந்த சங்கிலிய அரசன் அங்கிருந்து ஒழிந்தோடியதாகவும், பின்னர் போர்த்துக் கீசப் படையினர் சங்கிலிய அரசனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் வரலாறு.சங்கிலிய அரசன் போர்த்துக் கீசரைப் பொருட்படுத்தாது செயற்படுவதை அறிந்த அந்திர பூர்த்தாடு தே மென்டோன்சா எனும் பெயர் கொண்ட தளபதி 1591 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் பெரிய கப்பற் படை சகிதம் வந்திறங்கினர்.
யாழ்ப்பாணத்து அரசருடைய படை வீரர்கள் எதிர்த்துப் போராடிய போதும் பலனில்லாத சூழலில் குறித்த படைஇலங்கை வந்தடைந்த இரண்டு நாட்களிலேயே நல்லூரை முற்றுகையிட்டது.
இந்த முற்றுக்கைக்கெதிராக யாழ்ப்பாணத்து அரசனின் படை வீரர்கள் மட்டுமன்றி கோயிற் பூசகர்கள், வத்தமிழர்கள் ஆகியோரும் வெகுண்டெழுந்து போரிட்டனர்.இந்தப் போரிலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தையும், ஏனைய சைவ ஆலயங்களையும் பாதுகாப்பதற்காகப் பலரும் தங்கள் உன்னதமான உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டி
யேற்பட்டது.
இதன் பின்னர் கொழும்பிலிருந்து போர்த்துக்கீசத் தேசாதிபதியின் கட்டளையின் பேரில் பிலிப்தெ ஒலிவேறா எனும் தளபதி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதுடன், அரசனையும் சிறைப்பிடித்தான்.1621 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்-02 ஆம் திகதி நல்லூரை ஆக்கிரமித்து 
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்குமாறு தனது படை வீரர்களுக்குப் பணித்ததன் பேரில் ஆலயம் முற்றுமுழுதாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
போர்த்துக்கீசத் தளபதியின் மிலேச்சத்தனமான செயல் கண்டு நல்லூர் ஆலயத்தைச் சூழவிருந்தவர்கள் பெரும் துயரடைந்தனர். கோயிலை அழியவிடாமல் தடுக்க கேட்பவற்றையெல்லாம் தருவதாகக் கெஞ்சினர். மன்றாடினர். ஆனாலும், போர்த்துக் கீசத் தளபதி இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை
போர்த்துக் கீசர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைத் தரமட்டமாக்கிய போதும் சைவப் பெருமக்களின் உள்ளத்திலிருந்து அவர்களால் நல்லூர்க் கந்தன் வழிபாட்டையும், எல்லாம் வல்ல முருகப் பெருமானின் நாமத்தையும் அழிக்க முடியவில்லை.1658 ஆம் ஆண்டு யூன் மாதம் போர்த்துக் கீசர் வசமிருந்த யாழ்ப்பாண மாவட்டம் ஒல்லாந்தர் வசமானது. ஒல்லாந்தர் தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும், தேவாலயங்களை நிறுவுவதிலும் ஆர்வம் காட்டினர்.இதன் ஒரு கட்டமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் முன்னரிருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் சமய வழிபாட்டுச் சுதந்திரம் காணப்படாமையால் ஆலயத்தைப் பெரிதாக நிர்மாணிக்காமல் 1734 ஆம் ஆண்டில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் ஏற்கனவே இருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் சிறியதொரு மடாலயம் அமைத்துப் பக்தர்கள் வேலை வைத்து அமைதியான முறையில் 
வழிபாடாற்றி வந்தார்கள்.
போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில் “யாழ்ப்பாண வைபவ மாலை” நூலிலும் 
கூறப்பட்டுள்ளது.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறப்பாராகக் கடமையாற்றி வந்த தொன் ஜீவான் மாப்பாண முதலியார் தனது பதவிச் செல்வாக்கைப் பயன்படுத்தி மீளவும் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக் கொண்டதாகவும் அறியக் கிடைக்கிறது.
ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன. ஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர 
வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த வருடம் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ் சாந்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சம்.
இந்த ஆலயத்தினை இரகுநாத மாப்பாண முதலியாரின் வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாகச் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். ஆலயத்தில் பூசைகள் காலநேர ஒழுங்கு தவறாது நிகழ்வதற்கு அல்லும் பகலும் அயராது தொண்டாற்றியவர் சங்கரப்பிள்ளை இரகுநாத 
மாப்பாண முதலியார். திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பின்படும் வழக்கம் இந்தக் கோயிலில்
 அறவே கிடையாது.
ஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் இந்த ஆலயமாகும். இது ஈழத்து ஆலயங்களில் வேறெங்கும் காண முடியாத தனிச் சிறப்பெனலாம்.ஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், 
திருவீதியும் திகழ்கிறது.
இவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப் பெருமானின் திருவுருவம் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முருகப் பெருமானின் ஞான சக்தியாகிய வேலே பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் 
குருபூசை மடம், நல்லூர்
துர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன. ஆலய மஹோற்சவப் பெருநாட்களில் மேற்படி மண்டபங்களில் ஆன்மீகக் கலை, கலாசார நிகழ்வுகளுடன், சில மண்டபங்களில் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நன்மை கருதி அன்னதானமும் 
வழங்கப்படுகிறது.
நாள் தோறும் இங்கு ஆறுகாலப் பூசைகள் இடம்பெறுகின்றன. வாரத்தில் வெள்ளிகிழமைகளிலும், விசேட நாட்களிலும் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் பலர்.நல்லூர்க் கந்தன் 
மஹோற்சவம் ஆவணி மாத அமாவாசையைத் 
தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 
தினங்கள் மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலுமே 25 தினங்களாக மஹோற்சவப் பெருவிழாக்கள் வருடம் தோறும் நடைபெற்று வருகின்றன. மஹோற்சவ நாட்களில் மொத்தமாக 55 திருவிழாக்கள் 
நடைபெறுகின்றன.
இவற்றுள் கொடியேற்றம்,திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன முக்கியமானவை.
காலைத் திருவிழாவுக்கு 150 ரூபாவும், மாலைத் திருவிழாவுக்கு 235 ரூபா 50 சத்தமும் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் தனித்துவம் வாய்ந்த ஆலயமும் இதுவாகும்.
ஆலய உற்சவ காலங்களில் பெருந் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்து கலந்து கொள்ளுவர். ஆலயத் தேர், தீர்த்த
 உற்சவ நாட்களில் இலட்சோப இலட்சம் அடியவர்கள் ஆலய வீதிகளில் ஒன்று கூடி முருகப் பெருமானைப் பக்திப் பரவசத்துடன் வழிபாடாற்றுதலும், நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்ஷணம் செய்தும், காவடிகள் எடுத்தும் மெய்யுருக வழிபடும் காட்சிகள் 
மெய்சிலிர்க்க வைப்பன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

தங்க ரதமேறி நல்லூர் கந்தன் அடியவர்களுக்கு அருள் பாலித்தார் 08.09. 18

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 08.09.2018 (புதன்கிழமை) இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப்பெருமானின் தங்கரத உற்சவம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இன்றைய தினம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வேல்
விமானத்தில் வீதியுலா வீதியுலா வந்தார்மாலை 5
 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வேல்பெருமான் வள்ளி – தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
எம்பெருமான் தங்கரதமேறி ஜொலித்த அருட்காட்சியை காண பக்தர்கள் அலையென திரண்டு வந்திருந்தனர். கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள்
 இடம்பெற்று வருகின்றன.
தினமும் காலையும் மாலையும் இடம்பெறும் திருவிழா நிகழ்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
வியாழன், ஆகஸ்ட் 09, 2018

ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய​ வேட்டை திருவிழா

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வேட்டைத்திருவிழாவானது வெகு சிறப்பாக இன்று புதன்கிழமை ( 08.08.2018) மாலை காரைதீவு கொம்புச்சந்தியில் 
நடைபெற்றது.
மேற்படி வேட்டைத்திருவிழாவானது காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து கொம்புச்சந்தியை வந்தடைந்து விசேட பூசைகளின் பின்னர் வேட்டைத்திருவிழாவானது
 சிறப்பாக நடைபெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், ஜூன் 11, 2018

பிறந்தநாள்வாழ்த்து திரு இந்திரன் அவர்களின் 11.06.18

யாழ்மயிலையூரைப் பிறப்பிடமாகவும்   பரிஸ்சில் வாழ்ந்து வரும் பாடகர், நடிகர், கவிஞர் என்ற பல்முகக்கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்களின்  பிறந்த நாள் 11.06.2918. இன்று பரிஸ்சில் உள்ள தனது இல்லத்தில் அன்பு  மனைவி,அன்புப்   பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் இவரை
  வாழ்த்துகின்றனர்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
கலைஞர்நவற்கிரி .தேவன் ராஜா  
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
நவக்கிரி இணையம் 
நிலாவரை இணையம் 
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி.நவக்கிரி  இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், மே 24, 2018

மறுபிறவி யாருக்கு மீண்டும் கிடையாது

யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை 
குறிப்பிடுகின்றன.
மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன அவை..
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. 
இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி
 ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன
 அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. 
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது. 
இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது என குறிப்பிடுகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், மே 17, 2018

ஆலயங்களில் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன்

ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
மனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த பலவித ஒலிகளை பயன்படுத்துவான். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும் குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த ஹரஹரா கோஷம் செய்யப்படுகிறது. கோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.
ஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக சேர்ந்து எழுப்புவதனால் மனமானது 
தூய்மையடைகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், ஏப்ரல் 30, 2018

சித்திரா பௌர்ணமி! சிறப்புக்கள் ஒரு பார்வை!

சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரம் இணைந்த பௌர்ணமி தினத்தன்று அநுட்டிக்கப்படும் ஒரு நாளாகும். ‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். 
இந்நாளில் கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். 
சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் 
என்பது ஐதீகம்.
மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் 
நாள்தான் இந்நாள்.
மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம்.
சித்திரா பௌர்ணமி பூஜை:-
சித்திரா பௌர்ணமியன்று ஒரு கலசம் ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கவும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 
இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
சித்ரகுப்த கோயில்:-
சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள இந்துக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது 
தொன்னம்பிக்கை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சித்திரா பௌர்ணமி எனப்படுவது


சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிதினத்தன்று சைவ மக்களால்அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.
இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல்வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர்.
தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை 
அநுட்டிப்பர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>,முருகனின் தேர் சரிந்ததில் மக்கள் அல்லோல கல்லோலம்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திடீரென சரிந்து விழுந்துள்ளது.
கருங்காலி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா.29.0418.. இன்று நடைபெற்று வருகின்றது.
இதன்போது தேர் வலம் வந்துகொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்த்திருவிழா ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் தேரின் இருப்பிடத்திற்கு வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தெய்வக் குற்றம் ஆகிவிடுமோ எனும் அச்சம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் தேர்த்திருவிழா.

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
காலை 07 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுளா வந்த அம்மன் காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து கடந்த 14 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று , இன்றைய தினம் தேர்த்திருவிழா
 நடைபெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம் 22.04.18.

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் ,22.04.2018. இன்று   ஐம்பதாவது .பிறந்த நாளை மிகசிறப்பாக கொண்டாடினர்   இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் தேவன் லோவி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றன 
 வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>செல்வ கடாட்சம் கிடைக்க தினமும் மகாலட்சுமிக்கு சொல்ல வேண்டியது

தினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது
 சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள்
 ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வவரதே
 ஸர்வதுஷ்டபயங்கரீ
ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்திபுத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸ்தாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த்ரஹிதே தேவி ஆத்யஸக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மகா லக்ஷ்மி 
நமோஸ்துதே
கருத்து: மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை
 வணங்குகிறோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, ஏப்ரல் 15, 2018

பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரா் ஆலய தேர்த் திருவிழா.15.04.18

இலங்கையில்   பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரா் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் தேர்திருவிழா
 15-04.2018.இன்று  காலை   அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக திருக்கோணேஸ்வரா்  ஆலய தேர்திருவிழா நடை  பெற்றது அதன்   நிழல் படங்களில் காணலாம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
நமக்கு களங்கமில்லாத வாழ்க்கை வாழ விளம்பியே வரம் தருக!


விடை­பெ­றும் ஏவி­ளம்பி வரு­ட­மா­னது, சொல்­லத்­தக்­க­வாறு எந்­த­வொரு சாத­னை­யை­யும் எமக்­குத் தரா­மல், பிறக்­கின்ற விளம்பி வரு­டத்­திற்கு தனது சித்­தி­ரைப் புது­வ­ருட நல் வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்து, தான்­மு­டிக்க வேண்­டிய அரை­குறை வேலை­க­ளை­யும் ஒப்­ப­டைத்­துத் தன்­னி­ருப்­பி­டம் 
செல்­கி­றது.
புது­வ­ரு­ட­மா­னது  அனைத்­தை­யும் எமக்குத்தர  வேண்­டும்.
முற்­றத்­தில் கோலமிட்டு, விளக்­கேற்றி, பொங்­க­லிட்டு, சூரிய வணக்­கம் செய்து கோமா­தாக்­க­ளின் வரு­கை­யிலே உன்­னைப் புகழ்ந்­தேத்தி, 365 நாளும் அற்­பு­தம் செய்து நீயோ அதி­ச­ய­மாக வேண்­டும் என நாம் பணிந்து உன்­னைப் போற்­று­கின்­றோம். ஆகவே நீ வெல்­வது நிச்­ச­யம்.
விடை­காண வேண்­டும் நீ
விளம்பி என்ற சொல்­லுக்­கும் மேற்­போந்த பொறுப்­புக்­க­ளுக்­கும் விடை­கா­ணவே நீ வர­வேண்­டும். மேலும் மக்­கள் அனை­வ­ரும் சரி­நி­கர் சமா­ன­மாக வாழ­வும், , விளம்பி எனும் சித்­தி­ரைப் புத்­தாண்டே நீ வர­ம­ரு­ளப் பிறந்து வாராய்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ்நல்லூர்க் கந்தன்புத்தாண்டு தினத்தில் வீதி வலம் வந்தார்

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


/>

ஞாயிறு, மார்ச் 25, 2018

பிறந்தநாள்வாழ்த்து பாடகர் திரு கணேஸ் (25.03.18)

யாழ்  திருேநல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ் அவர்களின்  பிறந்தநாள்,  
 (25.03.2018) இன்று இவரை அன்பு மனைவி    அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் மற்றும்  ,
ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து .இன் நன்நாளில் உற்றார்.உறவினர்களுடன் 
இவரை . இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி   என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, மார்ச் 23, 2018

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.23.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தீர்த்ததிருவிழா. 15ம் நாள் பகல். 23.03.2018 வெள்ளிக்கிழமை  இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன் பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் தீர்த்ததிருவிழா. மிகவும் சிறப்பாக நடை பொற்றது  
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தீர்த்ததிருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், மார்ச் 22, 2018

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.22.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் 
தேர் திருவிழா. 14ம் நாள் பகல். 22.03.2018 வியாழக்கிழமை இன்று. அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில்
 தேரில் உலா வந்தார்கள் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
 நிழல் படங்கள் இணைப்பு