siruppiddy

செவ்வாய், ஜூலை 23, 2024

யாழ் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆடிச் செவ்வாய் உற்சவம்

யாழ் வடமரச்சியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி தேவஸ்தானத்தின் ஆடிச் செவ்வாய் உற்சவம்.23-07-2024. இன்று நடைபெற்றது.
இதில் பல பகாங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் படையல் செய்து வழிபட்டனர்.
செல்வச்சந்நிதி முருகன் துணை .






 

வெள்ளி, மார்ச் 01, 2024

பிறந்தநாள் வாழ்த்து திருமதி றாதா றாதா 01.03.2024

யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட  திருமதி  றாதா றாதா  (ராதா  ) அவர்களின் பிறந்த நாள் .01-.03-2024 .இன்று இவரை அன்பு கணவர்  அன்புப்பிள்ளைகள் சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்  இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்முருகன் மத்தனை காளி அம்மன்  பூவடி வயிரவர்   இறைஅருள் பெற்று  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாநலமும் பெற்று புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன.



வெள்ளி, ஜனவரி 19, 2024

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் பதினோராவது திருமண நாள் 19.01.2024..இன்று தம்பதியினரை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,
பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 வாழ்த்துகின்றனர்.
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அப்பாவையிரவர் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் சிவசுப்பிரமணியர் ஆசியுடன்
.தம்பதியினருக்கு 
திருமண வாழ்த்து கவிதை.
.இன்று திருமண நாள் காணும் அன்பு தம்பதியருக்கு
இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட நல்வாழ்த்துக்கள்  
திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. 
திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இந்த தொகுப்பு திருமண நாள் வாழ்த்து கவிதை பற்றியது. கணவன் மனைவி எனும் உன்னதமான உறவின் தொடக்க நாளான இந்த நாளை "திருமண நாள் வாழ்த்து" ( Wedding Anniversary Wishes ) கவிதை மூலம் வாழ்த்துவோம்
 சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்   பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 





திங்கள், ஜனவரி 15, 2024

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும்.
வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.
பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.
உழவர்கள் இந்தப் பண்டிகையை சிறப்பாக
 கொண்டாடுவார்கள்.
அந்தவகையில் தமிழர் திருநாளாம் தைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மற்றும் உலக வாழ் தமிழர்களுக்கு பிறந்திருக்கும் இந்த தை, புது வழி காட்டட்டும் என் இணையஉறவுகள் முகநூல் நண்பர்கள் 
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் என்  இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகும் 
தை பிறக்க, யாவரின் வாழ்வு சிறக்க, வாழ்க வளமுடன்.








 

செவ்வாய், ஜூன் 20, 2023

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி 15.06.2023

 

யேர்மன் டோ ட்முண்ட்னில் பிறப்பிக்கமாகக்கொண்டபிரபல பாடகி செல்வி தேவராசா தேவதி. அவர்களின் (17வது) பிறந்தநாள் 15.06.2023.-இன்று 
இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மச்சான் மச்சாள்மார் . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன் லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்
உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன் இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வென
நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் உறவு இணையங்களும் நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றன
இவர் தலை சிறந்த பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவராசா தேவதி மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர்
பாடகியாக, ஒளிப்படப்பிடிப்பாளியாக, நிழல் படப்பிடிப்பாளர் ளியாக,படத்தொகுப்பாளியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் இவர் எஸ் ரி எஸ் ஒளியகத்தில் 04.01.2013 உருவான பாடல் நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாருக்கான பாடலையும் இணைந்து பாடியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், மார்ச் 01, 2023

பிறந்தநாள் வாழ்த்து திருமதி றாதா றாதா 01.03.2023

யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட  திருமதி  றாதா றாதா  (ராதா  )
அவர்களின் பிறந்த நாள் .01-.03-2023 .இன்று
இவரை அன்பு கணவர்  அன்புப்பிள்ளைகள் சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்முருகன் மத்தனை காளி அம்மன்  பூவடி வயிரவர் 
 இறைஅருள் பெற்று  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு
தேவதை ஒன்று
இறங்கி வந்த நாள்!!..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கிஇனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






திங்கள், அக்டோபர் 24, 2022

இருளகன்று ஒளிவெள்ளம் பெருக இணைய வாசகர்களுக்கு என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்துக்களால்24-10-2022.திங்கள்கிழமை 
 இன்று கொண்டாடப்படுகின்றது.
அனைவரினதும் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்!
தீபத்திருநாளை கொண்டாடும், உலகம் எங்கும் பரந்து வாழும் எமது வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில்
எனது இந்த இணையயங்களும்  பெருமை கொள்கின்ற
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, அக்டோபர் 23, 2022

வடமராட்சியில் அமைந்துள்ள நாகர் கோயில் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகதம்பிரான்.

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள நாகர் கோயில் ஆலயத்தில்  இன்றைய தினம்  காட்சி கொடுத்த நாகதம்பிரான்.புதுமைகள் பலபுரியும் வடமராட்சி  நாகர் கோயில் ஆலயத்தில் நாகதம்பிரான் காட்சி கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது
பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, ஆகஸ்ட் 05, 2022

எங்கே பணத்தை வைக்கிறீர்கள் இந்த தவறுகளை செய்தால் வீட்டில் செல்வம் தங்காது

பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்களது இருக்கை ஆனது வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக் 
கொள்வது நல்லது.
பணம் வைப்பதற்கான மிகச்சரியான திசை என்றால் வடக்கு திசை தான். அறையின் 4 மூலைகளில் கட்டாயம் பணத்தை வைக்கக்கூடாது. அதாவது வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற மூலைகளில் பணத்தை வைப்பது கூடாது. தெற்கு திசையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது பணம் வைத்திருக்கும் இடமானது நுழைவு வாயிலை பார்த்தவாறு கட்டாயம் இருக்கக் கூடாது. வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்கவேண்டும்.
அதேபோல் பூஜையறையில் சிலர் பணத்தை வைத்திருப்பார்கள். இதுவும் தவறான முறையாகும். பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். பூச்சிகள் வரும்படி
 விட்டுவிட கூடாது.
பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் பேர்ஸிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருங்கள்.
பணம் என்பது நிலையான ஒரு பொருள் அல்ல. இன்று இருக்கும் நாளை இல்லாமல் போகும்.
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சம்பாதிக்கும் பணம் வீண் போவதில்லை. ஈட்டிய செல்வத்தை நிலைக்குமாறு வழி 
செய்து கொள்ளுங்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, ஜூலை 22, 2022

ஆலயத்தில் கோவில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது.கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் 
கூறியிருக்கின்றனர்.
இவ்வாறு பல சந்தேகங்களுக்கான பதிலை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன் பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.
கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் 
அது உண்மை அல்ல.
ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி 
இருக்கிறது.
கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன் கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம்,
துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள்
 தான் காரணமாகும்.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு
 வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து,விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் 
நிம்மதியை அளிக்கிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூலை 15, 2022

நீங்கள் ஒரு ரூபாய் தானம் செய்தால் ஒரு கோடி பெறலாமாம்

இன்றைய தலைமுறையைச் சார்ந்த பலரின் எண்ணம் என்னவென்றால் எதையும் எளிதில் அடைந்துவிட வேண்டும் என்பதே. ஆனால் இறை அருளை பெறுவதென்பது அத்தகைய எளிதான
 விடயம் இல்லை.
ஆனால் இல்லாதவர்களுக்கு தானம் செய்வதின் மூலம் இறை அருளை கூட எளிதில் பெறலாம். ஒரு ரூபாய் தானம் செய்து ஒரு கோடி ரூபாய் பெறுவதெப்படி என்பதை பற்றி இப்போது
 பார்ப்போம்.
வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு வரூதிநி ஏகாதசி என்று பெயர். அந்த நாளில் காலையில் எழுது குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று துளசி அர்ச்சனை செய்வது பல 
நன்மைகளை தரும்.
அதோடு அன்றைய தினத்தில் பணத்திற்காக கஷ்டப்படும் எழமானவர்களின் கல்விக்கு உதவும்படியாக ஒரு ருபாய் தானம் செய்தாலும் அது பல கோடிகளாய் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதே போல் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். அன்று காலை எழுந்ததும் குளித்துவிட்டு பெருமாள் கோவிலிற்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கி 
புண்ணியம் பெருகும்.
அதோடு புத்தி கூர்மையடையும். இந்த மாபெரும் ரகசியத்தை ராமபிரான் அவரது குல குருவான வசிஷ்டரிடம் கேட்டறிந்ததாக 
புராணம் கூறுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூலை 08, 2022

எம் வீட்டிற்கு தெய்வ சக்தியை கொண்டு வருவது எப்படி தெரியுமா

பொதுவாக எல்லோரும் தங்களின் வீட்டில் தெய்வம் குடிகொண்டாள் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோம். அந்த எண்ணத்திற்கு பின்னால் பல சுயநலன்கள் அடங்கியுள்ளது என்பது வேறு விடயம்.
வீட்டில் சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும் 
அதேபோல் சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும். உங்கள் வீட்டில் என்ன செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் 
பார்ப்போம் வாருங்கள்.
நீங்கள் புதிதாக குடிபோகும் எந்த ஒரு வீட்டிற்கும் தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டுசெல்வது அவசியம். மனிதர்களைக் காட்டிலும் பறவைகளிடம் இந்த 
ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.
வீட்டில் சிட்டுக்குருவி, புறா, அணில் போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது என அறியப்படுகிறது.
உங்கள் வீட்டு வாசலிலோ இல்லை ஏதாவது சந்திலோ 
தானியங்களை பரப்பி வைத்தால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு
 பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
புறா, குருவி போன்ற ஜீவசக்தி கொண்ட ஜீவன்கள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு
 கெட்ட சகுனமாக அமையலாம்.
புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை மிரட்டவோ விரட்டவோ வேண்டாம். இவை உங்கள் வீட்டிற்கு வந்து போவதால்
 நன்மையே நடக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, ஜூலை 03, 2022

நாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு படையெடுக்கும் பக்தர்கள்

 

ன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு  03-07-2022-இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.இன்றைய தினம்(3) திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கரையில் ஆறுமுக நாவலருக்கான சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள் நுழையும் வீதியில் சுமார் 28 அடி நீளமான சிவன் சிலையும் வைபவ ரீதியாக திறந்து 
வைக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பக்த அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.தொடர்ந்தும் நாளை திங்கள் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நிறைவடையும்.
பின்னர் கிரிகைகள் இடம் பெற்று 6 ஆம் திகதி புதன்கிழமை காலை சுப முர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா 
இடம்பெற உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, ஜூலை 01, 2022

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொடியேற்றம் 01.07.2022

சுவிற்சர்லாந்து  சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த மகோற்சவ திருவிழா நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2053 சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) வெள்ளிக்கிழமை முதல்
 ஆனித்திங்கள் 28ம் நாள் (12.07.2022) செவ்வாய்க்கிழமை வரை வருடாந்த பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது
.01.07.2022 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்ற
 பூசை வழிபாடுகளுடன் வெகுவிமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அடியவர்கள் இவ்விழாகாலங்களில் ஆசாரசீலர்களாக வருகைதந்து,  எம் பெருமானின் அருள் பெற்று 
நலமுடன் வாழ்வீராக

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>








புதன், ஜூன் 29, 2022

யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்


யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது.29-06-2022. இன்றைய தினம்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதன் ஒரு அங்கமாக, நேற்று(28) காலை விநாயகர் வழிபாடு, நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு தலைமையில் சிவாச்சாரியார்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக விளங்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த பெருந்திருவிழா இன்று புதன்கிழமை பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் உற்சவம் நிகழவுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, ஜூன் 17, 2022

பசுவை வீட்டிற்குள் புதுமனைப் புகுவிழாவில் அழைத்து வருவதன் காரணம்

முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு. அதனால்தான் பசுவை குருவின் அம்சம் என்று சொல்வார்கள். பிரகஸ்பதி, குரு மாறுகிறாரே அதனுடைய அம்சம் பசு. பசுவின் கொம்பில் இருந்து, கண் இமையிலிருந்து, வாய் நுனி வரைக்கும் அத்தனையிலும் தேவர்களும், மூவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவதை குடியிருக்கிறார். அதனால் பசுவை பின் பக்கத்தில் தொட்டுக் கும்பிடுவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகட்டும் என்பதற்காக. காரணம், பசு தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியல்பூர்வமாக பார்க்கும் போது கிருமி நாசினியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 
நல்ல பசும்பால் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு சமமாக உள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு சிறந்த உணவாகவும் 
அது அமைகிறது.
அதனால்தான் பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.
தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால், அந்த பசுஞ்சாணம் தெளித்த இடத்தில் ஒரு செழிப்பு தெரியும். அதனால்தான் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் பசுஞ்சாணத்தை தெளித்து, மெழுகி செய்வார்கள். இன்னும் சிலர் பசுஞ்சாணத்தை உருட்டி அதன் மீது விளக்கேற்றுவார்கள். பிள்ளையாரையும் பசுஞ்சாணத்தால் பிடித்து அதன் மீது அருகம்புல் செருகி மந்திரங்களை சொல்லும் போது உடனடியாக நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும்.
இதுபோல பசுவினுடைய அத்தனையும் நமக்கு எல்லா வகையிலும், எல்லா விதத்திலும் பயன்படுகிறது. பசுவிற்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எல்லா தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி உண்டு. இந்த மாதிரியான தெய்வ அமைப்பு பசுவிற்கு மட்டும் அமைந்துள்ளது. தற்பொழுது
 இவர்கள் ஜெர்சி பசுவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை. நம்ம நாட்டுப் பசு, அதற்கும் முன்பாக பார்த்தால் காராம்பசு.என்னுடைய தாத்தா காலத்திலெல்லாம் காராம் பசுக்கள் நிறைய இருந்தது. காராம்பசுவினுடைய காம்புகளைப் பார்த்தால் சிறியதாக இருக்கும். ஆனால் கறக்க கறக்க பால் வரும். அந்தப் பால் பணங்கற்கண்டு பால் போன்று இருக்கும். அப்படியே குடிக்கலாம். அதற்கடுத்து, அதற்கு சில தெய்வீக அமைப்பெல்லாம் உண்டு.
அதாவது, புல் பூண்டுகளைக் கூட தேர்ந்தெடுத்துதான் மேயும். நாட்டுப் பசுவிற்கும், காராம்பசுவிற்குமே அதிக வித்தியாசம் உண்டு. நாட்டுப் பசு எல்லா புற்களையுமே மேயும், ஆனால் காராம் பசு சில வகையானப் புற்கள், சில வகையான இலைகள் மட்டும்தான் சாப்பிடும். மிகவும் சென்சிடிவானது. கோபத்துடன் தொட்டால் கூட சாப்பிடாது.
இந்த மாதிரியான தெய்வ லோக, தெய்வத் தன்மையுடைய பசுவெல்லாம் உண்டு. அதனால் பசு வீட்டிற்குள் வந்துவிட்டுச் செல்வது
 என்பது நல்லது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>