siruppiddy

ஞாயிறு, ஏப்ரல் 15, 2018

யாழ்நல்லூர்க் கந்தன்புத்தாண்டு தினத்தில் வீதி வலம் வந்தார்

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


/>

ஞாயிறு, மார்ச் 25, 2018

பிறந்தநாள்வாழ்த்து பாடகர் திரு கணேஸ் (25.03.18)

யாழ்  திருேநல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குர‌லோன் கணேஸ் அவர்களின்  பிறந்தநாள்,  
 (25.03.2018) இன்று இவரை அன்பு மனைவி    அன்புப்பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் , மசன் மார் மற்றும்  ,
ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன் இணைந்து .இன் நன்நாளில் உற்றார்.உறவினர்களுடன் 
இவரை . இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி   என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, மார்ச் 23, 2018

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.23.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் தீர்த்ததிருவிழா. 15ம் நாள் பகல். 23.03.2018 வெள்ளிக்கிழமை  இன்று.
அடியவர்கள் கூ ட்டத்துடன் பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் தீர்த்ததிருவிழா. மிகவும் சிறப்பாக நடை பொற்றது  
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தீர்த்ததிருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











வியாழன், மார்ச் 22, 2018

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.22.03.18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம் 
தேர் திருவிழா. 14ம் நாள் பகல். 22.03.2018 வியாழக்கிழமை இன்று. அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில்
 தேரில் உலா வந்தார்கள் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
 நிழல் படங்கள் இணைப்பு








சனி, மார்ச் 03, 2018

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடிஏற்றம் 09/03/18.

யாழ் நவக்கிரி அருள்மிகு  ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்தமஹோற்சவ விஞ்ஞாபனம்  {காலை.10.30.மணிக்கு கொடிஏற்ரத் திருவிழா} 08.03.2018. வெள்ளிக்கிழமை.அன்று  ஆரம்பம்
 ஆகி 15 தினங்கள்.பகல் .இரவுத் திருவிழாக்கள்  நடைபெற உள்ளது தொடர்ந்து வேட்டை திருவிழா சப்பறம் ,தேர் ,தீர்த்தம் பூங்காவனம் வையிரவர் மடை நடை பெறவுள்ளதுஅடியார்களின் கவனத்திற்கு ,,
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,ஓம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, டிசம்பர் 03, 2017

நாம் கோயிலுக்கு செல்ல முன்பு இவற்றை கடைப்பிடித்தால் பலன் உண்டாகும் ?

கோவிலுக்கு புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு, சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பிரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி, பின் அடுத்ததைத் துவங்கவும்.
கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்றவேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்றவேண்டாம். அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் 
உண்ணவும்.
பரிகாரம் செய்தபின் பூஜைப் பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் 
கொடுக்கலாம்.
போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே
 முன்னின்று செய்யவும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






புதன், செப்டம்பர் 20, 2017

கொலு பொம்மைகளை நவராத்திரியின்போது எந்த முறையில் வைக்கவேண்டும்?


குறிப்பாக தமிழகத்திலும், ஆந்திராவிலும் கொலு வைத்து வணங்குவது பாரம்பரியமாக தொடர்கிறது.வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வணங்குதலோடு தினம் சுமங்கலி பெண்களுக்கு உணவு படைப்பது செல்வத்தை அளிக்கும்.
புழுவாகவும், மரமாகவும் அவதரித்து மனிதனாகி இறுதியில் இறைவனடி சேர்வோம் என்பதுதான் இதன் தத்துவம். ஒன்பது அல்லது ஒற்றைப் படையில் வருவதுபோல் கொலு வைப்பது முறை. விநாயகரை வைத்த பின்தான் மற்ற பொம்மைகளை வைப்பது ஐதீகம்.
முதல் படியில்: ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.
இரண்டால் படியில்: இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற 
பொம்மைகள் வைக்க வேண்டும்.
மூன்றாம் படியில்: மூவறிவான கரையான், எறும்பு போன்ற 
பொம்மைகள் வைக்க வேண்டும்.
நான்காவது படியில்: நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள்
 வைக்க வேண்டும்.
ஐந்தாம் படியில்: ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள் போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.
ஆறாம் படியில்: ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.ஏழாம் படியில்; சாதரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
எட்டாம் படியில்: தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்ச பூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படியில்: முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில் சரஸ்வதி-லட்சுமிக்கும் நடுவில் சக்திதேவி இருக்க வேண்டுமாம்.
ஒன்பது படிகள் இயலவில்லை எனில் ஒற்றை படை எண்களில் அமைக்கலாம். இந்த வழக்கம் முந்தையா மன்னர் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>