siruppiddy

சனி, ஆகஸ்ட் 01, 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தங்கா அகிலா 01.08.2020


 யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் அன்பு அம்மா சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார்
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.


வெள்ளி, ஜூலை 31, 2020

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா 31.07.20


யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்களின் பிறந்தநாள் 31-07-2020 இன்று  பிறந்தநாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அன்பு அப்பா,
அன்பு அம்மா மற்றும்
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் நோர்வே யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிவயிரவர்  
இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்  சகல கலைகளும்  பயின்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென வாழ்த்துகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>


வெள்ளி, ஜூலை 17, 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா பாலையா 17.07.20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் அறுபத்திஏழாவது பிறந்தநாள் இன்று 17..07.2020.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் 

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


தமிழ்நாடட்டில் உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவில்

தமிழ்நாடட்டில் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*
அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
*#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*
மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 
*ஏன் கோவிலை கட்டினார்கள்?*
*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?
தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.
*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?
*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.
இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.
*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.
*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 
*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம்  கோயில்கள்.
*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.
வாழிய பைந்தமிழ் நாடு..
தமிழ்நாடட்டில்  உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவில் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஆலய நுழைவாயிலுள்ள வாசற்படியை ஏன் மிதித்து செல்லக் கூடாது

கோவிலில் தினந்தோறும் நடத்தப்பட்டு வரும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும், மணி, மேள தாளம் மற்றும் நாதஸ்வரம் போன்ற சத்தங்களாலும் பல அற்புத சக்திகள் கோவில் முழுவதும் இருக்கிறது என்று விஞ்ஞான ரீதியாக 
நிரூபிக்க உண்மை. இப்படி பல 
அற்புதங்கள் நிறைந்த கோவிலின் நுழைவாயிலில் உள்ள வாசற்படியை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பது பலரது கேள்வியாக உள்ளது.
கோவிலுக்குள் செல்லும் அனைவரும் கால்களை
 நன்கு கழுவி விட்டு செல்வது வழக்கம். ஆனால், அப்படி செய்யும் அவர்களுக்கு கோவிலின் வாசற்படியை மிதித்து 
செல்ல வேண்டுமா அல்லது தாண்டி செல்லவேண்டுமா 
என்று யோசிப்பது 
வழக்கம். அப்படி யோசிக்கவே தேவையில்லை. ஏனென்றால், கோவியிலுக்குள் செல்லும் அனைவரும் வாசற்படியை தாண்டி தான்
 செல்ல வேண்டும்.
அப்படி தாண்டி செல்வதற்கு முன்பு ஒவ்வொருவரும், குனிந்து நமது வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவ மத்தியின் ஆக்ஞா சக்கரம் உள்ள இடத்தில் அழுத்த வேண்டும். அப்படி 
செய்யும் போது நம் உடலானது நேர்மறையான ஆற்றல்களை கிரகிக்கும். இதையடுத்து
, நாம், கோவிலுக்குள் சென்றதும் நம் பாதம் வழியாக கோவிலில் உள்ள
 நேர்மறை ஆற்றல்களானது நம் உடலுக்குள் ஊடுருவ ஆரம்பிக்கும். இதன் காரணமாக நாம் அனைவரும் கோவிலுக்குள் செல்லும் போது கால்களை நன்கு கழுவிவிட்டும், கோவில் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டை தாண்டியும் செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, மே 23, 2020

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-20

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2020.இன்று  39வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து 

 திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை..

தேவன் வகுத்த இந்த விவாக சாசனம் நடைபெறவிருக்கும் சுபயோக சுபதினத்தில் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்த்தி வாழ்க்கை வளம் பெற பேரன்போடு 
சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா தம்பதியனர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்

அன்பை அறிவை அளவின்றி அளித்து இரு உறவுகள் இதயங்களை அன்பு பாச நேசங்களால் இடம் மாற்றி கொள்ளும் சிறந்த நிகழ்வே திருமணம் … ஆனந்தம் பொங்கி நூறாண்டுகள் நீடூழி  வாழ 

இறை  ஆசிபெற்று  பெற்று

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
இறைவன் ஆணையிட்ட விதியின் படி இணையவிருக்கும் இரு நல்ல இதயங்களின் இல்லற விழாவான இந்த திருமண நன்னாள் நல்லபடியாக அமைய வாழ்த்துகிறோம்  சிறப்பான திருமண 
தின வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர்
 மற்றும் 
அப்பா வயிரவர் மேல்மருவத்தூர் அம்மன் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம் 
. வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், ஏப்ரல் 28, 2020

வலம்புரிவிநாயகர் விநாயகனே வினைதீர்ப்பவனே

நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும்
(வலம்புரிவிநாயகர், இடம்புரி_விநாயகர்)
மற்றும் அவரைப்பற்றி தெரியாத ரகசியம் தொடர்பான அரிய பதிவு:
ஆன்மீகத்தில் விநாயகர் வழிபாடு தொடர் பான ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன்.
மனித மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இந்த மூளையின் இடது, மற்றும் வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை உறுப்புக்களின் செய்கைகளுக்கும் காரணம்.
இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம்.
இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை, நாடிகள் என வரையறுக்கிறது.
நமது உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.
இங்கு நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள். இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.
விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக் கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.
வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசி யின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
#வலது_நாசிக்_காற்று (சூரிய கலை)
1-உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
2-வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
3-உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
4-உடலின் வலிமை அதிகரிக்கும்.
5-மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
6-இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
#இடது_நாசிக்_காற்று (சந்திர கலை)
1-உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
2-சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
3-இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
4-பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு 
சாந்தத் தன்மை உருவாகும்.
5-மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
6-அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள்.

பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு வெளியிடும் 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும் அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.
விநாயகரின் விக்ரஹ மகிமையை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை .
அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடமல் விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுகிறோம்.
எனவே நாம்...! விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு நமது சுவாசம் சம்பந்தப் பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் பயணம் செய்வோம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>