சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் காசிக்குச் சென்ற போது அங்கு அவர் பிரமாண்டமான ஒரு உருத்திராட்ச மாலையை பார்த்தபின் அதேபோன்ற மாலை ஒன்று சுவிஸ் நாட்டில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்கா ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று நேர்த்தி வைத்துள்ளார்.
அதன்படி சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு அந்த மாலையை காணிக்கையாகச் செலுத்தினார். மாலையை சரவணபவநந்தா சுவாமிகளிடம் கையளித்தபின் அதனை விசேட வழிபாடாக நடத்தப்பட்டு தாயுமானவர் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு
போடப்பட்டது.
மிகவும் பெறுமதியான 1008 உருத்திராட்சம் கொண்ட மாலையை வழங்கியவர் தனது பெயர் விவரங்களை வெளியிட விரும்பவில்லை என
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக