siruppiddy

செவ்வாய், ஏப்ரல் 13, 2021

மலரும் மங்களகரமான பிலவ வருடப் பிறப்பு சுப நேரங்கள் .14.04.2021

 மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கிறது.
விஷூ புண்ணிய காலம்
முன்னிரவு நாடி 38 விநாடி 51 (9.39 மணி) முதல் அன்று பின்னிரவு நாடி 58 விநாடி 51 (5.39 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.
மருத்து நீர், ஆடை
இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் நீலம், சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.
உண்டிகள்
அறுசுவை உணவுடன் பொரிக்கறி, கசப்பு என்பவை சேர்த்தருந்த வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள்
அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம், பூரம், உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம், பூராடம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.
கைவிசேஷம்
14.04.2021 காலை 09.09 - 09.52 வரை
14.04.2021 பிற்பகல் 2.22 - 4.11 வரை
16.04.2021 அதிகாலை 4.14 - 5.07 வரை
17.04.2021 காலை 07.40 - 09.00 வரை
17.04.2021 பிற்பகல் 03.04 - 03.59 வரை
ஆதாய விரய பலன்
மேடம் - நஷ்டம்
இடபம் - நஷ்டம்
மிதுனம் - சமசுகம்
கர்க்கடகம் - நஷ்டம்
சிங்கம் - பெருநஷ்டம்
கன்னி - சமசுகம்
துலாம் - நஷ்டம்
விருச்சிகம் - நஷ்டம்
தனு - அதிகலாபம்
மகரம் - சமசுகம்
கும்பம் - சமசுகம்
மீனம் - அதிகலாபம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக