யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா
(தேவன் தர்மா)..தம்பதியினரின்
திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை..
தேவன் வகுத்த இந்த விவாக சாசனம் நடைபெறவிருக்கும் சுபயோக சுபதினத்தில் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்த்தி வாழ்க்கை வளம் பெற பேரன்போடு
சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா தம்பதியனர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்
அன்பை அறிவை அளவின்றி அளித்து இரு உறவுகள் இதயங்களை அன்பு பாச நேசங்களால் இடம் மாற்றி கொள்ளும் சிறந்த நிகழ்வே திருமணம் … ஆனந்தம் பொங்கி நூறாண்டுகள் நீடூழி வாழ
இறை ஆசிபெற்று பெற்று
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
இறைவன் ஆணையிட்ட விதியின் படி இணையவிருக்கும் இரு நல்ல இதயங்களின் இல்லற விழாவான இந்த திருமண நன்னாள் நல்லபடியாக அமைய வாழ்த்துகிறோம் சிறப்பான திருமண
தின வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும்
உறவு இணையங்களும் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர்
மற்றும்
அப்பா வயிரவர் மேல்மருவத்தூர் அம்மன் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன் வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
மற்றும் அவரைப்பற்றி தெரியாத ரகசியம் தொடர்பான அரிய பதிவு:
ஆன்மீகத்தில் விநாயகர் வழிபாடு தொடர் பான ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன்.
மனித மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இந்த மூளையின் இடது, மற்றும் வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை உறுப்புக்களின் செய்கைகளுக்கும் காரணம்.
இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம்.
இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை, நாடிகள் என வரையறுக்கிறது.
நமது உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.
இங்கு நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள். இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.
விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக் கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.
வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
விநாயகர் விக்ரஹத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசி யின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
#வலது_நாசிக்_காற்று (சூரிய கலை)
1-உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
2-வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
3-உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
4-உடலின் வலிமை அதிகரிக்கும்.
5-மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
6-இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
#இடது_நாசிக்_காற்று (சந்திர கலை)
1-உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
2-சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
3-இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
4-பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு
சாந்தத் தன்மை உருவாகும்.
5-மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
6-அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள்.
பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு வெளியிடும் 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும் அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.
விநாயகரின் விக்ரஹ மகிமையை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை .
அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடமல் விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
எனவே நாம்...! விநாயகப்பெருமானின் விக்ரஹத்திற்கு நமது சுவாசம் சம்பந்தப் பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் பயணம் செய்வோம்.
தேங்காயின் அமைப்பில் வேறுசில தத்துவங்களும் சொல்லப்படுகின்றன. தேங்காயின் மேல் உள்ள கடுமையான ஓடு மனிதனின் அறியாமை மற்றும் கர்வம். அது மாயையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனுள் இருக்கும் வெண்மையான பருப்பு தூய்மையான
ஞான நிலை அல்லது ஆத்மஞானம். உள்ளே இருக்கும் நீர் ஆத்மஞானத்தால் விளையும் பரமானந்தம்.
அறியாமை, கர்வம், மாயை என்ற கெட்டியான ஓடு உடைந்தால் மட்டுமே ஆத்மஞானம் கிடைக்கும், அதனுடனேயே இருக்கும் பரமானந்த நிலையை மனிதன் பருக முடியும் என்கிற தத்துவம் தேங்காய் உடைப்பதன் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது. உள்ளே
இருக்கும் ஆத்மஞானத்தையும், பரமானந்த நிலையையும் ஒருவன் அறிய முடியாமல் என்றுமே மாயை மிகவும் உறுதியாக இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக
தேங்காய் இருக்கிறது.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய
மிக முக்கியமான சிறப்பு. இரண்டு
கண்களுடன் பிறந்த மனிதன் நன்றாகப் பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றான். அதனால் பண்பட்டு பக்குவப்பட்டு அடையும் ஞான மனநிலைக்கும் கூட தேங்காய் ஒரு குறியீடாக உள்ளது. அதனால் தான் மூன்று கண்களுடன் இருக்கும் தேங்காய்
மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர
நிலையில் இருக்கிறார்.இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.விருச்சிக ராசி:விருச்சிக ராசிக்கு
கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம்
வீட்டில் சூரியன் புதன், இரண்டாம் வீட்டில் கேது, செவ்வாய், குரு, மூன்றாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் சுக்கிரன் என
கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சனி சந்தோஷமாக
இருக்கிறார்.மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். பிசினஸ் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மாத
தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க.தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வம்பு வழக்குகளை
தவிர்த்து விடுங்கள்.
மார்ச் 22ஆம் திகதி உங்க ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று உச்சம் பெற்று அமரப்போகிறார்.மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனியோடு செவ்வாய் உச்சம் பெற்று இணைகிறார். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாகும்.புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை
மேஷம் ராசியில் இருக்கும் சுக்கிரன் மீதும் விழுவதால் காதல் மலரும். காதல் உறவில் கவனம் தேவை
குரு பகவான் மாத இறுதியில் அதிசாரமாக மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. மாத இறுதியில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு
சென்று சஞ்சரிக்கும் காலத்தில் சந்தோஷம் அதிகமாகும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் இந்த மாதம் நீங்க ரொம்ப
பொறுமையாக இருங்க.
நிதானமாக இருந்தால் நிறைய நல்லது நடக்கும் ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை
இந்த மாதம் வேண்டாம்.
தனுசு ராசி:மார்ச் மாதம் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் குரு, கேது, செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, சூரியன்,புதன் 3ஆம் வீட்டிலும் சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்
.ராகுவின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் இருக்கிறது. இந்த மாதம் உங்க ராசிக்கு யோகம் தரக்கூடிய புதன் வக்ர
நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார்.வேலையில் நல்ல மாற்றம் வரும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். சூரியன் உ
ங்க ராசிக்கு மாத முற்பகுதியில் முயற்சி ஸ்தானமான
மூன்றாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில்
நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.பாக்ய ஸ்தான அதிபதி
சூரியன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சுகங்களை கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு சாதகங்களை செய்ய மாட்டார். என்றாலும் செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக
இருப்பது அவசியம்.
மாத இறுதியில் குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். சுப பேச்சுக்கள் ஆரம்பிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக நடைபெறும்.குடும்பம் குதூகலமாக இருக்கும். தடைகள் இடைஞ்சல்கள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு
நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம்.நினைவாற்றல் அதிகமாகும். உயர்கல்வி
படிக்க யோகம் வரும். மாத பிற்பகுதியில் நிறைய நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். உடல் உபாதைகள் நீங்கும். மார்ச் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான மாதமாக அமையும்.
தைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா
07.02.20. காலை இடம்பெற்றது.
நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள
வயலுக்குச் செல்வார்கள் .
அங்கு வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள்
இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தப் புதிர் எடுக்கும் விழா 286ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை
இது ஐயப்பன் விரதம் அனுஷ்டிக்கப்படும் மாதம் ஆம் ..விரதங்களில் மிகவும் கடினமான மிகவும் பக்தி பூர்வமான கடுமையான விரதங்களில் இதுவும் ஒன்று…இந்த மாதத்தில் விரதம் இருக்கும் சாமி மார்கள் ஐயப்பனை தரிசிக்க கேரளாவில் உள்ள ஐயப்பன் மலைக்கு
செல்வது வழக்கம்.
மிக நீண்ட கடினமான இந்தப் பயணத்தில் உலகெங்கும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து, ஐயப்பன் புகழ் பாடி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்… சபரி மலை ஏறி ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் எந்நாளும் இன்பமே ….தீர்க்க ஆயுளுடன் இன்பகரமாக வாழ முடியும்
என்பது ஐதீகம்..
அந்த வகையில், விரத காலத்தில் ஐயப்பம் புகழ் பாடும் பக்தர்கள் வரிசையில் பல ஆயிரம் பாடல்கள் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்துள்ளன…. இன மத பேதங்களுக்கு அப்பால், ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் வரிசையில் ஐயப்பன் புகழ பாடி அண்மையில் வெளிவந்த மிகவும் இனிய கண்கவர் நடனத்துடன் கூடிய பாடல் ஒன்று தமிழ் மொழியில் இணையத்தில் வேகமாக
வைரலாகி வருகின்றது
திந்தகத்தோம் திந்தகத்தோம் அய்யப்பா என்று ஆரம்பிக்கும் இந்த அழகிய பாடலை பிரபல தென்னிந்தி பின்னணிப் படாகர் உன்னிக்கிருஷ்ணனின் செல்வப் புதல்வி உத்தராவின் கணீர்க்குரலில் பாடியுள்ளார். இந்தபாடலுக்கு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ராம் சுரேந்தர் அவர்கள் இசை வழங்கியுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தப் பாடலை நீங்களும் பார்த்து ஐயப்பனை தரிசிப்பபதுடன் நின்று விடாது, எல்லோரும் பார்த்து ஐயப்பன் புகழை பரவச் செய்ய இதனை ஏனையவர்களுக்கும் பகிருங்கள்…. உலகமெங்கும் ஐயப்பன் புகழ ஓங்கி அகிலமெங்கும் சாந்தியும் சமாதானமும் திளைத்திட இந்த ஐயப்பன் புகழ் பாடும் காணொளியை பிறருக்கும்