இது ஐயப்பன் விரதம் அனுஷ்டிக்கப்படும் மாதம் ஆம் ..விரதங்களில் மிகவும் கடினமான மிகவும் பக்தி பூர்வமான கடுமையான விரதங்களில் இதுவும் ஒன்று…இந்த மாதத்தில் விரதம் இருக்கும் சாமி மார்கள் ஐயப்பனை தரிசிக்க கேரளாவில் உள்ள ஐயப்பன் மலைக்கு
செல்வது வழக்கம்.
மிக நீண்ட கடினமான இந்தப் பயணத்தில் உலகெங்கும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து, ஐயப்பன் புகழ் பாடி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்… சபரி மலை ஏறி ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் எந்நாளும் இன்பமே ….தீர்க்க ஆயுளுடன் இன்பகரமாக வாழ முடியும்
என்பது ஐதீகம்..
அந்த வகையில், விரத காலத்தில் ஐயப்பம் புகழ் பாடும் பக்தர்கள் வரிசையில் பல ஆயிரம் பாடல்கள் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்துள்ளன…. இன மத பேதங்களுக்கு அப்பால், ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் வரிசையில் ஐயப்பன் புகழ பாடி அண்மையில் வெளிவந்த மிகவும் இனிய கண்கவர் நடனத்துடன் கூடிய பாடல் ஒன்று தமிழ் மொழியில் இணையத்தில் வேகமாக
வைரலாகி வருகின்றது
திந்தகத்தோம் திந்தகத்தோம் அய்யப்பா என்று ஆரம்பிக்கும் இந்த அழகிய பாடலை பிரபல தென்னிந்தி பின்னணிப் படாகர் உன்னிக்கிருஷ்ணனின் செல்வப் புதல்வி உத்தராவின் கணீர்க்குரலில் பாடியுள்ளார். இந்தபாடலுக்கு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ராம் சுரேந்தர் அவர்கள் இசை வழங்கியுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தப் பாடலை நீங்களும் பார்த்து ஐயப்பனை தரிசிப்பபதுடன் நின்று விடாது, எல்லோரும் பார்த்து ஐயப்பன் புகழை பரவச் செய்ய இதனை ஏனையவர்களுக்கும் பகிருங்கள்…. உலகமெங்கும் ஐயப்பன் புகழ ஓங்கி அகிலமெங்கும் சாந்தியும் சமாதானமும் திளைத்திட இந்த ஐயப்பன் புகழ் பாடும் காணொளியை பிறருக்கும்
பகிர்ந்திடுங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக