siruppiddy

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.20

 

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி  தனது ஏழாவது
பிறந்த நாளை 12.09.2020..இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத்தங்கச்சி அன்பு ஐய்யா அப்பம்மா மார் பூட்டி -தாத்தாமார் அம்மம்மா 
மார்மாமா மார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் நோய் நொடி இன்றி
அன்பிலும் அறத்திலும் நிறைந்து சீரும்சிறப்புடன் பல்கலைகளும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும் வாழ்த்துகின்றோம் —-
செல்வி லோவிதன் யஸ்வினிக்குட்டிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்கள் பொறாமை
கொள்கின்றது.. பிறந்து
இருந்தால் உன்
பிறந்த நாளாக தான்
பிறந்து இருக்க வேண்டும்
என்று..
 பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றோம்.!
வாழ்க வளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>







வெள்ளி, செப்டம்பர் 11, 2020

அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை.10-09-20

 

யாழ் பருத்தித்துறை  வடமராட்சியில் - சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வல்லிபுராழ்வார் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை 10-09-2020.அன்று மிகச்சிறப்பாக  பூஜை  நடைபெற்றது
புல்லாங்குழல் கொண்ட கண்ணன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்த  காட்சி மெய்சிலிர்க்க வைத்தது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், செப்டம்பர் 01, 2020

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவிழா,01.09.20

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 
அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.கொரோனா 
அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று
 வருவதுடன் 01-09-2020.இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முத்தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.இன்றைய 
தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டு 
முருகப் பெருமானைப் பக்தி பூர்வமாகத் தரிசித்தனர். இந்நிலையில், மகோற்சவத்தின் பெருந்திருவிழாவான 
தீர்த்தோற்சவம் நாளை காலை இடம்பெறவுள்ளது.இதேவேளை, கொரோனா நெருக்கடி காரணமாக இம்முறை தாகசாந்தி, அன்னதானம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அங்கப்பிரதட்சணம், 
அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு
 தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அத்துடன், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை எடுத்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 








பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.20


யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. 
திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் எட்டாவது    பிறந்தநாள்.01.10. 2020. இன்று 
 இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
 பெரியப்பாமார் பெரியம்மாமார்
 சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல் கலைகளும் பெற்று  நோய் நொடி இன்றி  சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை 
பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றோம் ..
வாழ்க வளமுடன்


நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>





திங்கள், ஆகஸ்ட் 31, 2020

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா,31-08-20

 

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா.31-08-2020. இன்று திங்கட்கிழமை  காலை இடம்பெற்றது.
 அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை 
ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து உள் வீதி உலா வந்த துர்க்கை அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு 
அருள் காட்சி அளித்தார்.
 கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை அடுத்து31-08-2020. இன்று திங்கட்கிழமைதேர்த்திருவிழா
 இடம்பெற்றது.
நாளை செவ்வாய்கிழமை   தீர்த்த திருவிழா 
இடம்பெறவுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





திங்கள், ஆகஸ்ட் 17, 2020

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா .17.08.20

 

 யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்
.வெகு விமர்சையாக 20.08.2017 இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் 
வருகைத் தந்துள்ளார்கள்.
உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை 
காணக்கூடியதாக உள்ளது.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுவதோடு, 24ஆம் நாளான 17-08-20.இன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் தேரின் வடம் பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
என்றுமில்லாத வகையில் யாழில் கூடியுள்ள பக்தர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவவதை  
காணக்கூடியதாக உள்ளது.
ஆலயத்தை சுற்றியும் ஏராளமான பக்த அடியார்கள் காணப்படுகின்றார்கள். தேரைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டத்தையும், வடம் பிடித்து தேரை இழுக்கும் காட்சிகளையும் பார்க்கும் போது மெய்சிலிர்க்க 
வைக்கின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

சனி, ஆகஸ்ட் 01, 2020

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தங்கா அகிலா 01.08.2020


 யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் அன்பு அம்மா சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார்
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.