siruppiddy

செவ்வாய், மே 10, 2016

திருமண நாள்வாழ்த்து திரு திருமதி சேனாதிராஜா 10:05:16.

திருகோணமலையை  பிறப்பிடமாகவும்   சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .சேனாதிராஜா
( சேனா .ரஞ்சி ) தம்பதிகளின்  திருமணநாள் 1 0.05.2016.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு  பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவர்களை  இறை அருள்பெற்று  சகல வளங்களும் பெற்று இன்புற்று  சீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
  இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

இத்தியடி விநாயகர் கொடியேற்றதிருவிழா 12.04.16

இத்தியடி விநாயகர் தேவஸ்தானம் சங்கத்தானை ஆலாய கொடியேற்ற திருவிழாவிற்கு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்ததிலிருந்து கொடிச்சீலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, ஏப்ரல் 09, 2016

ஐந்தாம் ஆண்டில்கால்பதிக்கும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்இணையம்

இன்று 09.04.2016-ஐந்தாம் ஆண்டில்கால்பதிக்கும்
http://pilliyar.blogspot.ch/
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ப்லோக்ச்போட்
இணைய 
 வாழ்த்துடன் படைப்பளி 
    தேவன்  ராஜா  
ஆலைய நிகழ்வுகளையும் 
தமிழ்த்தாயின் 
பணிகளை 
செவ்வனே எடுத்துயம்பி
ஈழத்து மகவுகளின்
உரிமை குரலாய் 
நாதமாய்
அன்று போல் 
இன்றும் செவ்வனே
கொடுக்கும் 
லோவிதன் இணையமே
ஐந்தாண்டு
கண்டுவிட்டாய்
எம்மை மனம் 
குளிர வைக்கும்
உந்தன் பணி
தொடரட்டும்
பல காலம்
உறவுகளை பிரிந்து
அயல் தேசமதில்
தள்ளாடும் வாழ்வு களுக்கு
ஆலய நிகழ்வுகளை 
இணைத்துஉன் சேவையால் 
  கண்குளிர வெத்தாய்  
உலகிற்கு உண்சேவையை எப்போ 
காட்டப்போகிறேன்
என்று ஏங்கி நின்றாய் 
இன்று மகிழ்கிறேன்
உன் இறக்கையில்
என் வரிகளை 
சுமந்து
வந்த நாளில்
இணையத்தின் வளர்ச்சிக்கும்,
சேவைக்கும் என்றும் 
எனது மனமார்ந்தவாழ்த்துக்கள் .
 தொடரட்டும் உன் சேவைகள்.
ஆக்கம் -தேவன்  ராஜா    
நன்றி 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்பக்த்திப்பாடல் காணொளி

செவ்வாய், டிசம்பர் 15, 2015

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா

  சிறப்புமிக்க அருள்மிகு யாழ்  நவக்கரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டத்திருவிழா
பங்குனித்திங்கள் பதினோராம் நாள் புதன் கிழமை அடியவர்கூட்டத்துடன்  வெகு விமரிசையாக இடம்பெற்றது.
 இந்நிகழ்வில்  அடியார்கள் மிகுந்த  பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டார்கள்.
அனேக பக்தர்களின் வேண்டுகோளுக்காக மீண்டும் இந்தக் காணொளி இணைப்பு 
அத்துடன் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் புகள் காணோளியும் இணைக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், செப்டம்பர் 25, 2014

சிறப்பாக இடம் பெற்ற நவராத்திரி விழா

வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம் பெற்றன.வவுனியா வைரவபுளியங்குளம் ஆதவிநாயகர் மற்றும் குட்செட் கருமாரி அம்மன் கோயில்களில் கொலு வைக்கப்பட்டு விசேட பூசைகள் இடம் பெற்றன.
 


வெள்ளி, செப்டம்பர் 05, 2014

குழந்தை திருமணம், பாக்கியம் அருளும் விநாயகர் கோவில்கள்

விநாயகப்பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் விநாயக சதுர்த்திக்கு எட்டு நாட்களுக்கு முன்பாக உப்பூரில் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர், பக்தர்களுக்கு மயில் வாகன ரூபமாகக் காட்சி தருவார். ஆவணி மாதம் கிருஷ்ணபட்சம் ஏகாதசி அன்று மட்டும் இந்த தரிசனத்தை காணப்பெற்றவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது உறுதி!
 * தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே ஒரு கி.மீ தொலைவில் காவிரிக்கரையில் உள்ளது திருவலஞ்சுழி வெள்ளை வாரணர் கோயில். கமலாம்பாள், வாணி என இரு மனைவியர் உண்டு. இவரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். பிள்ளைச்செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம். திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நாற் சந்திப்பில் அமர்ந்து அருள் புரிந்து வருகிறார் ஸ்ரீ பெருநாட்டுப் பிள்ளையார்.
இக்கோயில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான்திறந்திருக்கும். இந்தக் கோயிலின் சிறப்பே அரை மணி நேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக்காண தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி,திருமண விலேஷம் என்று அனைத்து வேண்டுதல்களுக்கும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் செவிசாய்த்து பெருநாட்டுப் பிள்ளையார் நிறைவேற்றி தருகிறார்.
 * திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள மேலக் கோட்டையின் கன்னி மூலையில் ஸ்ரீதலை வெட்டி பிள்ளையார் இருக்கிறார். கல்யாணத்தடையால் கலங்கி தவிப்பவர்கள் இங்கு வந்து, பொங்கல் படையிலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவித்து, பச்சரிசி, எள், வெள்ளம் எனக் கலந்த கலவையைத் கிழே சிந்திய படி விநாயகரை மூன்று முறை வலம்வர வேண்டும்.
பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யணவரன் தேடி வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
 * திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெஞ்சாலையில் 12 கி,மீ மேற்கே அமைந்துள்ள கிராம் தீவனூர். அந்தக் கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
 * விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில் கோரையாற்றின் கரையில் அமைந்துள்ளார் மதுரவிநாயகர். திருமணத் தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து,
புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும், அரளி, சிகப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலி கட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதே போல் வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கி நல் வாழ்க்கை அமையும்.
 * நெல்லை காந்திமதியம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும். குழந்தை பிறந்ததும் இங்கு சந்திதிக்கு வந்து குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத்தந்து, வெளிப்புறமாக குழந்தையை வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, ஜூலை 06, 2014

நடைபெற்ற சிறுப்பிட்டி ஞானவைரவர் தீர்த்த திருவிழா

 
   சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்அலங்கார உற்சவத்தில்  தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எம் பெருமான் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் பக்தர்கள் முன்னும் பின்னும் சூழ, வழி எங்கும் எம்பெருமானுக்கு அருச்சனை ஆராதனை நடாத்தி எம்பெருமான் நிலாவரை   சென்றடைந்து புனித தீர்த்த கேணியில் பக்தி பரவசத்துடன் தீர்த்தம் ஆட.மற்றும் அங்கு பக்தர்கள் தூக்குகாவடி ஆட்டக்காவடி என  எடுத்து  எம்பெருமானிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றினார். அத்துடன் கொடியும் ஊஞ்சல் பாட்டு இடம்பெற்று இனிதே உற்சவம் நிறைவடைந்தது. உபயம்.ந அம்பிகைவாசன்
தீர்த்த திருவிழாப்புகைப்படங்கள்படங்கள்இணைப்பு