siruppiddy

திங்கள், மே 23, 2022

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-2022

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2022.இன்று நாற்பத்தியோராவது  வருடத் திருமண நாள்
காணும் தம்பதியினரை  அன்பு அம்மா பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்  சுவிஸ் உறவுகள் இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு இனிய கல்யாண நாள் நல் வாழ்த்துக் கவிதை உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
 இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!மணமக்களுக்கு எங்கள்  இனிய கல்யாண
நாள் நல் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் தம்பதியினரை 
,இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன  
  வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, ஏப்ரல் 16, 2022

காசிக்குச் சென்ற பக்தரால் சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை ஆலயத்திற்கு வழங்கப்பட்ட உருத்திராட்ச மாலை

சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் காசிக்குச் சென்ற போது  அங்கு அவர் பிரமாண்டமான ஒரு உருத்திராட்ச மாலையை பார்த்தபின் அதேபோன்ற மாலை ஒன்று சுவிஸ் நாட்டில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்கா ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று நேர்த்தி வைத்துள்ளார்.
அதன்படி சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு அந்த மாலையை காணிக்கையாகச் செலுத்தினார். மாலையை சரவணபவநந்தா சுவாமிகளிடம் கையளித்தபின் அதனை விசேட வழிபாடாக நடத்தப்பட்டு தாயுமானவர் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு 
போடப்பட்டது.
மிகவும் பெறுமதியான 1008 உருத்திராட்சம் கொண்ட மாலையை வழங்கியவர் தனது பெயர் விவரங்களை வெளியிட விரும்பவில்லை என
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, மார்ச் 04, 2022

பிறந்த நாள் வாழ்த்து திருமதி;கந்தசாமி பரமேஸ்வரி 04.03.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 04.03.2022இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன். கண்ணன்குடும்பத்தினர்லண்டன், மைத்துனர் சின்னத்துரை குடும்பத்தினர் சிறுப்பிட்டி, இவர்களுடன் யேர்மனியில் வசிக்கும் பெறாமக்கள் இராஜேஸ்வரி குடும்பத்தினர்,குமாரசாமி குடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர்,ஜெயகுமாரன்,குடும்பத்தினர், உற்றார் உறவினர்களும் இணைந்து
சிறுப்பிட்டி முத்துமாரி துணைகொண்டு நலமுடன் நிறைவான வாழ்வதில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வாக வாழ்வை கொண்டு வாழ்த்து வரும்தாயே பரமேஸ்வரி தெய்வத்தின் பேரைக்கொண்டாய் எம்மைத் தெய்வமாக ஆட்சிகொண்டாய் நன்மையிலும் தீமையிலும் நற் கருத்து உரைப்பவளே எல்லாநலமும்  பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென இந்த இணையமும்   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, பிப்ரவரி 04, 2022

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு கந்தையா ராசு 04.02,2022

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட 
திரு கந்தையா   ராசு  அவர்களின் பிறந்த நாள் 25-01-2021.அன்று தனது பிறந்தநாளை குடும்பஉறவுகளுடன் தனது இல்லத்தில்
 04-02-2022.அன்றுகொண்டாடினர் 
 இவரை அன்புப் பிள்ளைகள் அன்புச்சகோதர்கள்   அன்பு அத்தான் அக்கா மருமகள் தங்கை மார் தம்பி சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள் அன்புப் பேரப்பிள்ளைகள் 
பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்அன்பிலும் அறத்திலும் நிறைந்து நிறைந்த செல்வங்களோடும்..
இணைந்த துணையோடும்..
நீண்ட ஆயுளோடும்...
புகழ் ஓங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




நமக்கு பணவரவை ஈர்த்து அதிகரிக்க செய்யும் கருமஞ்சள்

கருத்துப் போய் உள்ள இந்த மஞ்சள் உள்ளே நீல நிறத்தில் இருக்கும். வட மாநிலங்களில் இந்த மஞ்சளை பணத்தை ஈர்ப்பதற்கு மற்றும் ஆன்மீக காரியங்களில் பயன்படுத்துவது வழக்கம்.சக்தியுள்ள கருமஞ்சள் சனி பகவான் மற்றும் ராகுவால் ஏற்படும் பாதிப்புகளையும் 
குறைகிறது.
பணம் வேண்டி வெளியில் புறப்பட்டு சென்றால் இந்த மஞ்சளை சிறிது கல்லில் இழைத்து நெற்றியில் திருநீறு போல பூசிக் கொண்டு செல்லலாம். கண்டிப்பாக சென்ற இடத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பணத்தை ஈர்ப்பதில் கிராம்பை போல, கருமஞ்சளும் முக்கிய பங்கு 
வகிக்கிறது.
நீண்ட நாளாக அடைக்க முடியாத கடனை கூட உங்கள் பணப்பெட்டியில் இந்த கரு மஞ்சளை வைப்பதன் மூலம் அடைத்து விடலாம். கரு மஞ்சள் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு இருக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும்.
பணத்தை ஈர்க்க பெருமளவு பயன்படும் கருமஞ்சள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும்.
அது மட்டுமல்லாமல் கிரக தோஷங்கள் நீங்கவும் கருமஞ்சள் உபயோகப்படுத்தப்படுகிறது.சிகப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியில் இந்த மஞ்சளை வைத்து இறுக்கமாக கட்டி அவற்றை பணம் இருக்கும் இடங்களில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் பணவரவு அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, ஜனவரி 28, 2022

நமக்கு செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை வழிபட உகந்த வெள்ளிக்கிழமை வழிபாடு

<

செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்குரிய நாளாகும். பிற நாட்களை காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்த நாளாகும்.
எனவே, இந்த நாளில் ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும். நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமை தான் வெள்ளிக்கிழமை.வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட 
செல்வம் பெருகும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும்.மேலும், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர் சக்திகள் இருந்தால் விலகி விடும்.
அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்துணர்வு கிடைக்கும்.அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும்.
இதேபோல் அரசமரத்தை 11 முறை சுற்றி வருவதும் மிகச் சிறந்த
 நற்பலன்களை தரும்.
வெள்ளிக்கிழமைதோறும் குபேர விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


செவ்வாய், ஜனவரி 18, 2022

உங்க வீட்டில் மாதம் தோறும் பௌர்ணமி நாளில்இதை செய்ய மறக்காதீங்க

மாதம் தோறும் பௌர்ணமி நாளில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்துவருவது மிகச் சிறந்த பலன்களை தரும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமிகளுக்கு ஒவ்வொரு பலன்கள் உண்டு.பூஜைகள் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம் என்ற போதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை 
தரவல்லது.
எல்லா பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்து வர வாழ்வில் மேன்மை அடையலாம். அதன்படி,
சித்ரா பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்,வைகாசி பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணம் கைகூடும்,ஆனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும்,
ஆடி பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் அதிகரிக்கும்,ஆவணி பௌர்ணமியில் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்,புரட்டாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிறையும்,ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் பசிப் 
பிணிகள் நீங்கும்,
கார்த்திகை பௌர்ணமியில் விளக்கேற்றினால் புகழ் ஓங்கும்,மார்கழி பௌர்ணமியில் விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.,தை பௌர்ணமியில் விளக்கேற்றினால் நன்மைகள் அதிகரிக்கும்.,மாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் துன்பங்கள் விலகும்,பங்குனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் தர்மம் 
செய்த பலன் கிட்டும்,

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>