* வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்த மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார். "எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் யுகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது பகவத்கீதையில் வாக்களித்திருக்கிறார்.
* அறியப்படாத உன்னத கடவுளாகவும், எஜமானராகவும், நண்பனாகவும், சிறுகுழந்தையாகவும், காதலனாகவும், தாயாகவும், தந்தையாகவும் நமக்கு விருப்பமான முறையில் எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
* கிருஷ்ணலீலையைக் கேட்டால் பசி, தாகம் போன்ற உலகியல் விஷயங்கள் நமக்கு தோன்றாது. மதுரமான கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் புண்ணிய உலகைச் சென்றடைவது உறுதி.
* புல்லாங்குழல் இசைக்கும்போது கிருஷ்ணருடைய கண்கள் தாமரை மலர் போல மலர்ந்துள்ளன. வசீகரமான மயில் இறகு தலையில் அசைய கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்ததுபோல நம் உள்ளத்தை மயக்குகிறார். கார்மேகம் போன்ற நீலநிறமுடைய அவர், நமக்கு மழை போல் அருளை வாரி வழங்குகிறார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக