siruppiddy

வெள்ளி, செப்டம்பர் 08, 2017

பலருக்கு தெரியாமலே இருக்கிற ஆன்மீகத்தில் பஞ்சகவ்யம்

நம்மில் பலருக்கு இந்த பஞ்ச கவ்யம் என்பது தெரியாமலே இருக்கிறது.
 முடிந்தவரை நம்மவர்கள் மக்களுக்கு இதைத் தெரிவிக்கவும். பஞ்சகவ்யத்தை பலவாராக சொல்வதாகக் கேள்விப்பட்டேன். என் குருநாதர் ஒருவர் சொன்ன விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. இது முற்றிலும் சரி என்றே எனக்குப் பட்டது.
பஞ்சகவ்யம் என்பது என்ன? பசும்பால், நெய், கோமியம், தயிர், பசுஞ்சாணம். இந்த ஐந்து கூட்டுப்பொருட்களே பஞ்சகவ்யமாகும். இதிலும் ஓரே பசுமாட்டின் சாணம், நெய், தயிர், பால், கோமியம் என்று இருப்பதுதான் சிறப்பு. அதுவும் நாட்டுப்பசுவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த நாட்டுப்பசுவில் இந்த கைகளை எடுத்து சேர்த்தால் 
அதன் மணமே தனி.
சரி இந்த பஞ்ச கவ்யத்தை எடுத்து என்ன செய்வது? தேவையாளவு எடுத்து (கூடுதல் குறைவாகவும் இருக்கலாம்) ஒன்றாகப் பிசைந்து அதை கால்கள் படாத இடத்தில் வைத்துக் காயவைக்கவேண்டும். (சிறு சிறு அளவாக உருண்டையாக) நன்றாக காய்ந்தபின் எடுத்து அதை தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு வீடுகளில், பூஜை அறையில் சாம்பிராணி தூபம் போடும்போது இந்த பஞ்சகவ்யத் தூள் சிறிதளவு அதில் போட்டு புகை காட்ட துஷ்ட தேவதைகளின் தொந்தரவு நிரந்தரமாக விலகும். இதன் பலனை அனுபவித்தால்தான் தெரியும். எதையும் அனுபவத்தில் பார்ப்பதுதான் சிறந்தது. இப்படிச் செய்கின்றவர்களின் வீடுகளில் உள்ளவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். 
இந்த தூபத்தை கோயில்களிலும் காட்டலாம். தெய்வங்களுக்கு இது மிகவும் உகந்தது. காமதேணுவில் இல்லாத தேவர்களும், தெய்வங்களும், உலகங்களும் இல்லை எனச் சொல்வார்கள். அப்படியிருக்க அந்த காமதேணுவின் அம்சமாக விளங்கும் பசுமாட்டின் பஞ்சகவ்யத்தை உபயோகிப்பதில் நன்மையே ஏற்படும்.
இன்னொரு விதமாகவும் செய்யலாம். காய்ந்த பஞ்ச கவ்யத்தை ஒரு சுத்தமான இடத்தில் கும்பலாக வைத்து, அதன் நடுவில் கற்பூரம் வைத்து கொளுத்திவிட அது புகைந்து எரிந்து சாம்பலாகும். அந்த சாம்பலில் எரியாமல் கரியாக உள்ளதை எடுத்துவிட்டு சாம்பலை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு அதை விபூதியாக நெற்றியில் 
பூசிக்கொள்ள என்னென்ன நல்ல பலன்கள் ஏற்படும் என்று மொத்தமாக சொல்லமுடியாது. பரம ஏழைக்கும் சுவையான உணவு கிடைக்கும். வலிமை இழந்தவன் வலிமை பெறுவான். இதை முழு நம்பிக்கையோடு செய்யவேண்டும். சிறிது அவநம்பிக்கைக் கொண்டாலும் பலன் குறையும். இது தெய்வங்களின் பொருள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். இந்த விபூதியில் சிட்டிகையளவு வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சில வகைப் பிணிகள் நீங்குவதாகச் சொல்கிறார்கள். நம்பிக்கையே வாழ்க்கை. வாழுங்கள் என்றும் வளமோடும்-நலமோடும்.
குறிப்பு-சிலர் இந்த விபூதியில் அவரவர் குலதெய்வத்தின் மந்திரத்தை உருவேற்றி வைத்துக்கொள்வார்கள். அப்படி செய்வதால் இன்னும் கூடுதலான நல்ல பலன்கள் கிடைக்கும்.
“ஓம் சிவ சிவ ஓம்”
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக