siruppiddy

திங்கள், பிப்ரவரி 24, 2020

ஏழரைச் சனியிடம் சிக்கிய ராசிக்கு காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்

மார்ச் மாதம் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய், மிதுனத்தில் ராகு மேஷம் ராசியில் சுக்கிரன் மகரம் ராசியில் சனி , கும்பம் ராசியில் புதன் வக்ர
 நிலையில் இருக்கிறார்.இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.விருச்சிக ராசி:விருச்சிக ராசிக்கு 
கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் 
வீட்டில் சூரியன் புதன், இரண்டாம் வீட்டில் கேது, செவ்வாய், குரு, மூன்றாம் வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் சுக்கிரன் என 
கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 
சனி சந்தோஷமாக 
இருக்கிறார்.மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். பிசினஸ் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மாத 
தொடக்கத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க.தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வம்பு வழக்குகளை 
தவிர்த்து விடுங்கள்.
மார்ச் 22ஆம் திகதி உங்க ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று உச்சம் பெற்று அமரப்போகிறார்.மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனியோடு செவ்வாய் உச்சம் பெற்று இணைகிறார். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாகும்.புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். மகரம் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை
 மேஷம் ராசியில் இருக்கும் சுக்கிரன் மீதும் விழுவதால் காதல் மலரும். காதல் உறவில் கவனம் தேவை
குரு பகவான் மாத இறுதியில் அதிசாரமாக மூன்றாம் வீட்டிற்கு செல்கிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. மாத இறுதியில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு 
சென்று சஞ்சரிக்கும் காலத்தில் சந்தோஷம் அதிகமாகும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் இந்த மாதம் நீங்க ரொம்ப 
பொறுமையாக இருங்க.
நிதானமாக இருந்தால் நிறைய நல்லது நடக்கும் ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை
 இந்த மாதம் வேண்டாம்.
தனுசு ராசி:மார்ச் மாதம் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் குரு, கேது, செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, சூரியன்,புதன் 3ஆம் வீட்டிலும் சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர்
.ராகுவின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் இருக்கிறது. இந்த மாதம் உங்க ராசிக்கு யோகம் தரக்கூடிய புதன் வக்ர 
நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைகிறார்.வேலையில் நல்ல மாற்றம் வரும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். சூரியன் உ
ங்க ராசிக்கு மாத முற்பகுதியில் முயற்சி ஸ்தானமான 
மூன்றாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் 
நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.பாக்ய ஸ்தான அதிபதி 
சூரியன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் போது சுகங்களை கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு சாதகங்களை செய்ய மாட்டார். என்றாலும் செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக 
இருப்பது அவசியம்.
மாத இறுதியில் குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். சுப பேச்சுக்கள் ஆரம்பிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக நடைபெறும்.குடும்பம் குதூகலமாக இருக்கும். தடைகள் இடைஞ்சல்கள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு 
நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம்.நினைவாற்றல் அதிகமாகும். உயர்கல்வி
 படிக்க யோகம் வரும். மாத பிற்பகுதியில் நிறைய நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். உடல் உபாதைகள் நீங்கும். மார்ச் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான மாதமாக அமையும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், பிப்ரவரி 10, 2020

பிறந்தநாள் வாழ்த்துதிரு திரு மதி இன்பமோகன் -09.02.20

யாழ் புனகரியை   பிறப்பிடமாகவும்
  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன்  .அவர்களின் ;
 பிறந்தநாள். 09.02.2020.இன்று.  இவரை அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்  மாமிமார்  மாமா மார் சகோதரர்கள்  மற்றும் 
  பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   
மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்..இவரை   .மாவிடடபுரம் முருகன் மற்றும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
  அன்பிலும் அறத்திலும் நிறைந்து    உலகமும் உறவுகளும் போற்ற   சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, பிப்ரவரி 08, 2020

யாழ் நல்லூர்க் கந்தனுக்கு 286ஆவது நெற்புதிர் அறுவடை விழா

தைப்பூச நிகழ்வை முன்னிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா 
07.02.20. காலை இடம்பெற்றது.
நாளையதினம் கந்தனுக்கு உகந்த தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல் நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள
 வயலுக்குச் செல்வார்கள் .
அங்கு வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் 
இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தப் புதிர் எடுக்கும் விழா 286ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை 
குறிப்பிடத்தக்கது.நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, ஜனவரி 04, 2020

ஐயப்பன் புகழ் பாடும் காணொளி திந்தகத்தோம் திந்தகத்தோம் அய்யப்பா.

இது ஐயப்பன் விரதம் அனுஷ்டிக்கப்படும் மாதம் ஆம் ..விரதங்களில் மிகவும் கடினமான மிகவும் பக்தி பூர்வமான கடுமையான விரதங்களில் இதுவும் ஒன்று…இந்த மாதத்தில் விரதம் இருக்கும் சாமி மார்கள் ஐயப்பனை தரிசிக்க கேரளாவில் உள்ள ஐயப்பன் மலைக்கு
 செல்வது வழக்கம்.
மிக நீண்ட கடினமான இந்தப் பயணத்தில் உலகெங்கும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து, ஐயப்பன் புகழ் பாடி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்… சபரி மலை ஏறி ஐயப்பனை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் எந்நாளும் இன்பமே ….தீர்க்க ஆயுளுடன் இன்பகரமாக வாழ முடியும்
 என்பது ஐதீகம்..
அந்த வகையில், விரத காலத்தில் ஐயப்பம் புகழ் பாடும் பக்தர்கள் வரிசையில் பல ஆயிரம் பாடல்கள் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்துள்ளன…. இன மத பேதங்களுக்கு அப்பால், ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் வரிசையில் ஐயப்பன் புகழ பாடி அண்மையில் வெளிவந்த மிகவும் இனிய கண்கவர் நடனத்துடன் கூடிய பாடல் ஒன்று தமிழ் மொழியில் இணையத்தில் வேகமாக 
வைரலாகி வருகின்றது
திந்தகத்தோம் திந்தகத்தோம் அய்யப்பா என்று ஆரம்பிக்கும் இந்த அழகிய பாடலை பிரபல தென்னிந்தி பின்னணிப் படாகர் உன்னிக்கிருஷ்ணனின் செல்வப் புதல்வி உத்தராவின் கணீர்க்குரலில் பாடியுள்ளார். இந்தபாடலுக்கு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ராம் சுரேந்தர் அவர்கள் இசை வழங்கியுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தப் பாடலை நீங்களும் பார்த்து ஐயப்பனை தரிசிப்பபதுடன் நின்று விடாது, எல்லோரும் பார்த்து ஐயப்பன் புகழை பரவச் செய்ய இதனை ஏனையவர்களுக்கும் பகிருங்கள்…. உலகமெங்கும் ஐயப்பன் புகழ ஓங்கி அகிலமெங்கும் சாந்தியும் சமாதானமும் திளைத்திட இந்த ஐயப்பன் புகழ் பாடும் காணொளியை பிறருக்கும்
 பகிர்ந்திடுங்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

     


                        

ஞாயிறு, டிசம்பர் 29, 2019

பிறந்த நாள் .வாழ்த்து திருமதி வன்னிய சிங்கம் துளசி 29.12.19

யாழ்  தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும்  கொண்ட திருமதி வன்னிய சிங்கம்   துளசி 
அவர்களின்   பிறந்த நாள் . 29.12.2019..இன்று இவரை அன்புப் பிள்ளைகள்
 மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று நோய்நொடிஇன்றி  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

சனி, நவம்பர் 09, 2019

பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை. 9.11.2019 இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார்
 அம்மம்மா
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
 நவற்கிரிமாணிக்க ஸ்ரீ  பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






செவ்வாய், அக்டோபர் 01, 2019

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.19

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.
திரு .திருமதி. சாந்தகுமார்.(குமார் &கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் ஏழாவது பிறந்தநாள்.01.10. 2019. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில்
குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடினார்  இவரை அன்பு அப்‌பா அம்மா அன்புத்தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
பெரியப்பாமார் பெரியம்மாமார்.
சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று ,பல் கலைகளும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சீரும்சிறப்புடன் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம்.நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>