siruppiddy

வெள்ளி, ஜனவரி 15, 2021

நேரில் சிவபெருமானை கண்ட ஆங்கிலேய அதிகாரி

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது.
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை
 தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து 
கடிதங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது. மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி 
கடிதம் வராதது கண்டு துயருற்றார். ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது. அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த
 வேதியர்களைக் கண்டார். துயருற்ற முகத்தைக் கண்ட வேதியர்கள் காரணத்தைக் கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து 
அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தைத் தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.
கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தைப் புதுப்பித்துத் தருவதாக வேண்டிக் கொண்டு வீடு திரும்புகிறார். லகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கி சரியாகப் பதினோராம் நாள் செய்தி 
கொண்டு வருபவர், கர்னலிடமிருந்து செய்தியைக் கொண்டு வருகிறார். அதில் எழுதி இருந்தது "போர்க்களத்தில் இருந்து
 தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்துப் புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர். நாங்கள் தப்பிச்செல்ல
 இயலாதவாறு சிக்கிக் கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே 
சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய 
இந்திய துறவியைக் கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார். மேலும், அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும், அவர் தனது
 கையில் இருந்த அந்த ஆயுதத்தைக் கையாண்ட விதமும் மகத்தான விதமாக 
இருந்தது. இந்த சிறந்த மனிதனைக் கண்ட 
எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்தத் துறவியின் கருணையினால் தோல்வியைத் தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியைப் பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமானதன் காரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை
 உடைய கூறிய ஆயுதமே. அந்த உன்னதத் துறவி 
என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 
காக்க வந்ததாகவும் கூறினார்.
இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார். சில வாரங்களுக்குப் பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவர் நடந்தவற்றை 
விவரித்தார். கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர். 1883 ஆம் ஆண்டு 
கர்னல் மற்றும் அவர் மனைவி 16000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர். இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.
பன்னீர் செல்வம்> சதுரகிரி அவர்களின் முகநூல்
 சுவரிலிருந்து

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





சனி, செப்டம்பர் 26, 2020

இந்தியாவில் ஒரு கோவிலில் தங்கத்தை பிரசாதமாக வழங்கும் அதிசயம்

 

கோவில்களில் பிரசாதம் வழங்கப்படுவது என்பது சாதாரணமான ஒன்று. பெரும்பாலும் கோவில் பிரசாதங்கள் மக்கள் உண்ணக்கூடியவையாக இருக்கும். ஆனால் சில கோவில் பிரசாதங்கள் 
அப்படிப்பட்டதாக இருக்காது. சிலசமயம் விலையுயர்ந்த பொருட்கள் கூட கோவில் பிரசாதமாக வழங்கப்படலாம். ஆனால் 
இந்தியாவில் ஒரு கோவிலில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்கள் பிரசாமாக வழங்கப்படுகின்றதாம்.
அந்த கோவில் பற்றி பார்க்கலாம். இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ரத்லத்தில் உள்ள மஹாலக்ஷ்மி கோயில் அதன் பிரசாதத்திற்கு 
மிகவும் புகழ்பெற்றது. இந்த
 கோவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பிரசாதங்களைப் பெறுகிறது. அதில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கூட அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு, இந்த பிரசாதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பக்தர்களுக்கு பிரசாதம் வடிவத்தில் 
திருப்பித் தரப்படுகிறது.
கோவிலுக்கு வந்து இந்த பிரசாதத்தைப் பெற மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான பயணச் செலவு பெரும்பாலும் பிரசாதத்தின் மதிப்பை 
விட அதிகமாக இருக்கும். இருப்பினும், இங்கே தங்கம் மற்றும் வெள்ளி பிரசாத் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற உலோகமாக 
கருதப்படுவதில்லை. இது உண்மையில் செல்வத்தின் தெய்வத்தின் ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது. அது ஒருபோதும் செலவழிக்கவோ விற்கவோ படுவதில்லை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.20

 

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி  தனது ஏழாவது
பிறந்த நாளை 12.09.2020..இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்புத்தங்கச்சி அன்பு ஐய்யா அப்பம்மா மார் பூட்டி -தாத்தாமார் அம்மம்மா 
மார்மாமா மார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் நோய் நொடி இன்றி
அன்பிலும் அறத்திலும் நிறைந்து சீரும்சிறப்புடன் பல்கலைகளும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும் வாழ்த்துகின்றோம் —-
செல்வி லோவிதன் யஸ்வினிக்குட்டிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்கள் பொறாமை
கொள்கின்றது.. பிறந்து
இருந்தால் உன்
பிறந்த நாளாக தான்
பிறந்து இருக்க வேண்டும்
என்று..
 பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றோம்.!
வாழ்க வளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>







வெள்ளி, செப்டம்பர் 11, 2020

அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை.10-09-20

 

யாழ் பருத்தித்துறை  வடமராட்சியில் - சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வல்லிபுராழ்வார் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை 10-09-2020.அன்று மிகச்சிறப்பாக  பூஜை  நடைபெற்றது
புல்லாங்குழல் கொண்ட கண்ணன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்த  காட்சி மெய்சிலிர்க்க வைத்தது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், செப்டம்பர் 01, 2020

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவிழா,01.09.20

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 
அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.கொரோனா 
அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று
 வருவதுடன் 01-09-2020.இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முத்தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது.இன்றைய 
தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டு 
முருகப் பெருமானைப் பக்தி பூர்வமாகத் தரிசித்தனர். இந்நிலையில், மகோற்சவத்தின் பெருந்திருவிழாவான 
தீர்த்தோற்சவம் நாளை காலை இடம்பெறவுள்ளது.இதேவேளை, கொரோனா நெருக்கடி காரணமாக இம்முறை தாகசாந்தி, அன்னதானம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அங்கப்பிரதட்சணம், 
அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு
 தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அத்துடன், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை எடுத்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 








பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.20


யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. 
திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் எட்டாவது    பிறந்தநாள்.01.10. 2020. இன்று 
 இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
 பெரியப்பாமார் பெரியம்மாமார்
 சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல் கலைகளும் பெற்று  நோய் நொடி இன்றி  சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை 
பிறப்புகளில் உயர்ந்த
பிறப்பு மானிட பிறப்பு..
இந்த பிறப்பில் நீங்கள்
அனைத்தும் பெறவும்..
பெற்றவற்றை உலகிற்கு
பகிரவும்.. மகிழ்வுடன்
வாழ்த்துகின்றோம் ..
வாழ்க வளமுடன்


நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>





திங்கள், ஆகஸ்ட் 31, 2020

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா,31-08-20

 

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா.31-08-2020. இன்று திங்கட்கிழமை  காலை இடம்பெற்றது.
 அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜை 
ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து உள் வீதி உலா வந்த துர்க்கை அம்மன் காலை 9 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு 
அருள் காட்சி அளித்தார்.
 கொடியேற்றத்துடன் மகோற்சவ திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவை அடுத்து31-08-2020. இன்று திங்கட்கிழமைதேர்த்திருவிழா
 இடம்பெற்றது.
நாளை செவ்வாய்கிழமை   தீர்த்த திருவிழா 
இடம்பெறவுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>