siruppiddy

செவ்வாய், ஜனவரி 18, 2022

உங்க வீட்டில் மாதம் தோறும் பௌர்ணமி நாளில்இதை செய்ய மறக்காதீங்க

மாதம் தோறும் பௌர்ணமி நாளில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்துவருவது மிகச் சிறந்த பலன்களை தரும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமிகளுக்கு ஒவ்வொரு பலன்கள் உண்டு.பூஜைகள் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம் என்ற போதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை 
தரவல்லது.
எல்லா பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்து வர வாழ்வில் மேன்மை அடையலாம். அதன்படி,
சித்ரா பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்,வைகாசி பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணம் கைகூடும்,ஆனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும்,
ஆடி பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் அதிகரிக்கும்,ஆவணி பௌர்ணமியில் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்,புரட்டாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிறையும்,ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் பசிப் 
பிணிகள் நீங்கும்,
கார்த்திகை பௌர்ணமியில் விளக்கேற்றினால் புகழ் ஓங்கும்,மார்கழி பௌர்ணமியில் விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.,தை பௌர்ணமியில் விளக்கேற்றினால் நன்மைகள் அதிகரிக்கும்.,மாசி பௌர்ணமியில் விளக்கேற்றினால் துன்பங்கள் விலகும்,பங்குனி பௌர்ணமியில் விளக்கேற்றினால் தர்மம் 
செய்த பலன் கிட்டும்,

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, ஜனவரி 14, 2022

பிறந்தநாள் வாழ்த்து திரு ஐயாத்துரை ராகுலன் 14.01.22

யாழ் நவற்கிரியைப் பிறப்பிடமாகவும் தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு ஐயாத்துரை ராகுலன் அவர்களின் பிறந்த நாள் 14-01-2022.இன்று இவரை அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள்  அன்புச்சகோதரர்கள் 
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
இவரை நவற்கிரிமாணிக்கப்பிள்ளையார் சன்னதிமுருகன் நல்லூர் முருகன் கனடா முருகன்  இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  நோய்நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், ஜனவரி 12, 2022

பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு ரத்தினம் சந்திரபாலா

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  தற்போது பிரான்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு ரத்தினம் சந்திரபாலா
அவர்களின் அகவை நாள் 12.01-2022 இன்று  இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அன்பு அம்மா அண்ணா, , 
மாமாமார்கள் மாமிமார்  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி  மருமக்கள்  பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் 
நண்பர்கள்  உறவினர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சன்னதிமுருகன் 
 பிரான்ஸ் முருகன் இறை ஆசியுடன் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
உலகமும் உறவுகளும் போற்ற 
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று மகிழ்ச்சிகள் நிறைந்து..
உன் கனவுகளை அடைந்து
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, அக்டோபர் 01, 2021

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.21

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு .,திருமதி. சாந்தகுமார்.&கயிபா  தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் ஒன்பதாவது  பிறந்தநாள்.01.10. 2021. இன்று 
 இவரை அன்பு அப்‌பாஅம்மாஅன்பு தம்பி  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் 
அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்
,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று பல் கலைகளும் கற்று  சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
பிறந்த நாள் வாழ்த்துகவிதை 
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட
, குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
புதிதாய் பிறந்த 
நீயே ஒரு 
கவிதை தானே!! 
எங்கள் சபிரக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 




ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி அவர்களின்
12.09.2021. இன்று தனது இல்லத்தில்  கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தங்கச்சி
அன்பு ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார்
மச்சான் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன்
 இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்
பிறப்பின் தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது 
அது ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் போது அது மிகவும் அழகாகிறது
 வாழ்க்கையில் இறைவன் கொடுத்த மிகப்பெரிய வெகுமதி மனிதனாய் பிறப்பதே எனவே நீ ஜனனித்த இந்த அழகிய பொன்னான நாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டி உன்னை வாயார 
வாழ்த்துகின்றோம் 
தனியாய் நிலவொன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகம் வந்து என்னுலகில் என் கண் முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ இன்று பிறந்த என் வெண்ணிலா வாழிய பல்லாண்டு பல்லாண்டு
இந்த நாளில் பூமியில் பூத்த புதிய பூவுக்கு என் வாழ்த்து மடலான எங்கள்  உள்ளம் கனிந்த இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்
 உரித்தாகுக 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், செப்டம்பர் 09, 2021

நாம் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி?

ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று வரும் சதுர்த்தியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். இது விநாயகர் அவதரித்த தினமாக பார்க்கப்படுகிறது.வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்ட மனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து
அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.
மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-
(1)முல்லை-அறம்,(2)கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள், (3) வில்வம்- இன்பம்; விரும்பியவை 
அனைத்தும்,( 4) அறுகம்புல் – அனைத்துப் பாக்கியங்களும்,( 5) இலந்தை – கல்வி, (6) ஊமத்தை – பெருந்தன்மை, (7) வன்னி – இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்,( 8) நாயுருவி – முகப்பொலிவு, அழகு,( 9) கண்டங்கத்திரி – வீரம், (10) அரளி-வெற்றி. (11) எருக்கம் இலை- கருவில் உள்ள
சிசுவுக்கு பாதுகாப்பு, (12) மருதம் – குழந்தை பேறு, (13) விஷ்ணுக்ராந்தி – நுண்ணறிவு, (14) மாதுளை-பெரும்புகழ், (15) தேவதாரு – எதையும் தாங்கும் இதயம், (16) மருவு – இல்லற சுகம்,( 17) அரசு – உயர் பதவி, மதிப்பு, (18) ஜாதி மல்லிகை – சொந்த வீடு, பூமி பாக்கியம்,(19) தாழம் இலை – செல்வச்செழிப்பு,( 20) அகத்திக் கீரை – கடன் தொல்லையில் இருந்து விடுதலை, (21) தவனம் – நல்ல கணவன்-மனைவி அமைதல்.
இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மரிக்கொழுந்து, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவை நைவேத்யம் செய்ய வேண்டும்.
விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யும் போது அருகம்புல்லும், வன்னி இலைகளும், மந்தாரைப் பூவும் அவசியம் இருக்க வேண்டும். பொதுவாக சிவபெருமானின் பூஜைக்கு உகந்த எல்லா மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு ஏற்றவைதான். ஆனால் தாழம்பூ, துளசி ஆகியவை மட்டுமே கண்டிப்பாகக்கூடாது. பெரும்பாலன ஆலயங்களில் விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கிறார்கள். என்றாலும் 
இது தவறாகும்.
விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்பின் வருவனவற்றைப் படைக்கலாம். அப்பம், அவல், அமுது, அவரை, இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கல்கண்டு, வள்ளிக்கிழக்கு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், தேன், தினைமாவு, நெய், பச்சரிசி, பால்,பாகு வெல்லம், பணியாரம், 
கொழுக்கட்டை, பிட்டு, லட்டு
வடை, வெண்ணெய், விளாம்பழம், நாவல்பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆகியவை. விநாயகருக்கு அபிஷேகம் செய்ய
 சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, ரசபஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், கருப்பஞசாறு,
 இளநீர், சந்தனம், பழ ரசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை விநாயகருக்கு பிடித்தமானது



வியாழன், ஆகஸ்ட் 12, 2021

ஆடிக் வெள்ளியில் இந்த 1 பொருளை வாங்கினால் வறுமை நீங்கும்,

ஆடி மாதம் என்றாலே மங்கல பொருட்களுக்கு பஞ்சமே இல்லாமல் வாங்கி குவிக்கக் கூடிய ஒரு இனிய மாதமாக இருக்கிறது. ஆடி மாதத்தில் வாங்கும் எந்த ஒரு மங்களப் பொருட்களும் பன்மடங்கு பெருகி நமக்கு சுபீட்சத்தை அள்ளிக் கொடுக்கும். அது மட்டுமல்லாமல் மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கல பொருட்களாக இருக்கும் மஞ்சள், குங்குமம் போன்ற பூஜைக்கு உரிய பொருட்களை ஆடி மாதத்தில் வாங்கினால் மாங்கல்ய 
பலம் நீடிக்கும்.
ஆடி மாதம் வாங்க கூடிய எந்த ஒரு பொருளும் அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும். கடைசியாக வரும் ஆடி வெள்ளியில் இந்த பொருளை வாங்கி வையுங்கள். ஏற்கனவே இந்த பொருளை வாங்கிவிட்டு இருந்தால் கூட பரவாயில்லை, கொஞ்சமாவது அன்றைய நாளில் இந்த ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவதால் ஏழேழு பிறவிக்கும் வறுமை நீங்கி, செல்வம் ஆனது உயரும். அப்படி என்ன பொருள் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி 
பயணிப்போம்
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியிலும் ஏதாவது ஒரு மங்கல பொருட்களை வாங்கி வருவது நல்லது. அவை புதிதாக நம்மிடம் சேரும் பொழுது தெய்வ கடாட்சம் ஆனது நீடித்து நிலைத்து 
நிற்கும். குறிப்பாக வாசனை மிகுந்த மங்கல திரவியங்கள், பொடிகள் போன்றவற்றை வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களைக் 
கொடுக்கும். ஜவ்வாது, 
அத்தர், பன்னீர், புனுகு, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்ற பொருட்களை வாங்குவது இன்னும் சிறப்பு. நீங்கள் ஒவ்வொரு முறை சாமி கும்பிடும் பொழுது உங்கள் பூஜை அறையில் கட்டாயம் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை பூஜை செய்யும்
 பொழுதும் அந்த தண்ணீரை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் மறுநாள் பார்த்தால் கொஞ்சம் குறைந்து இருக்கும். எனவே அந்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. புதிதாக தண்ணீரை நிரப்பி தான் 
பயன்படுத்த வேண்டும்.
ஞ்ச பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால் மட்டும் போதாது, அதை தீர்த்தமாக மாற்ற துளசி இலைகள், பச்சை கற்பூரம், கிராம்பு போன்றவற்றை சேர்ப்பது உண்டு. இது எதுவுமே உங்களிடம்
 இல்லை என்றால் கூட பரவாயில்லை. ஏலக்காயை மட்டும் நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பூஜை அறை முழுவதும் தெய்வீக மணம் கமழும். வீட்டில் 
இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும். பிரச்சனைகள் தானாகவே குறைய ஆரம்பித்துவிடும். அது போல 
ஆடி வெள்ளியில் கடைசி நாளில் வாசனைப் பொருட்களை வாங்குவதும், கூடவே ‘அரிசி’ வாங்கி வைப்பது மிகவும் நல்லது. அன்னபூரணியாக இருக்கும் அரிசியை
 ஆடி கடைசி வெள்ளி அன்று வாங்கினால் அற்புத பலன்களை காண முடியும். குடும்பத்தில் இருக்கும் வருமானப் பற்றாக்குறை நீங்கி, வறுமை அகன்று, செல்வம் ஆனது பன்மடங்கு உயரும். தன, தானியம் பெருகும் என்பது நம்பிக்கை எனவே ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உங்களிடம் அரிசி இருந்தாலும், ஒரு கிலோ அரிசியை வாங்கி அன்றைய நாளில் அந்த புது அரிசியை கொண்டு சமைத்து, அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படையுங்கள்! இப்படி செய்வதால் சிறப்பானதொரு பலனை காணலாம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>