siruppiddy

வியாழன், அக்டோபர் 03, 2013

உலகின் மிகப்பெரிய405 அடி உயர கோபுரத்துடன் கோயில்


பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய இந்து கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை, துர்கா பூஜை தினத்தன்று (11ம் தேதி) நடத்தப்படுகிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் கூறியதாவது:-

இந்த கோயிலை கட்டுவதற்காக 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ரூ.500 கோடி செலவில் கட்டப்படும் இந்த கோயிலின் வளாகத்தில் சிவாலயம் உள்பட 18 சிறிய ஆலயங்கள் அமைக்கப்படும்.

சிவாலயத்துக்கள் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் உருவாக்கப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமரும் வகையில் பிரமாண்டமான அரங்கமும் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
கம்போடியா நாட்டில் இந்து மன்னர் சூர்யவர்மனால் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயில் 215 அடி உயரம் கொண்டது. இந்த கோயிலை உலகின் புராதாண சின்னங்களுள் ஒன்றாக ‘யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது.
பீகாரில் கட்டப்பட உள்ள இந்த புதிய கோயில் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கு உயரம் கொண்டதாக உருவாகலாம் என தெரிகிறது.
(படத்தில் காணப்படுவது கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் ஆகும்)

 

திங்கள், செப்டம்பர் 23, 2013

முத்துமாரிஅம்மன் தேர் திருவிழா காணொளி


சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்
 அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோ ங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள்
2013 ஆண்டுத் திருவிழா இனிதே நடந்தேறியது இதில் பக்தர்கள் கலந்து தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளார்கள்
 இந்த ஆண்டுத்தேர்த்திருவிழாவும் இனிதே நடந்தேறியுள்ளது இதன் உபயகாரர்கள் நல்லையா.சோதிப்பிள்ளை குடும்பத்தினர் இவர்கள் தேர்திருவிழாவை காட்ச்சிப்படுத்தி உங்கள் பார்வைக்காகவும் ஊர் உறவுகள் பார்வைக்காகவும்
 தந்து உதவியுள்ளார்கள் இவர்கள் போன்று எங்கள் ஊர்பதிவுகளைத் தந்து உதவினால் உலகப்பந்தில் வலம் வரும்
 ஒருகரம் தட்டி ஓசை வராது இணைவோம் செயல்படுவோம்  (11.03.13)

செவ்வாய், செப்டம்பர் 10, 2013

பிள்ளையார்சதுர்த்தி

 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
 இவை நான்கும் கலந்து உனக்கு
 நான் தருவேன்..
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே
 நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.
அனைவருக்கும் பிள்ளையார்
 சதுர்த்தி வாழ்த்துகள் —

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

நல்லூர்ப் பெருந்திருவிழாவின் 15ம் நாள்

மாலை நேர திருவிழாவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப் பெருமான் ஆட்டு.க்கடா வாகனத்தில் வெளிவீதியுலா வரும் காட்சிகளின் தொகுப்பு.,26.08.13


செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

சுவெற்றா ஜேர்மனி அம்மன் தேர்த்திருவிழா:


wttசுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர்த்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.08.2013 பக்தர்கள் படை சூழ நடை பெற்றது அதன் காணொளியை இணைய வாசகர்களுக்காக பதிவு செய்கின்றோம்.wt

சனி, ஆகஸ்ட் 10, 2013

கண்ணனின் மதி நுட்பமும்"""

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன்.
வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார்.
பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன.
அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்து கொண்ட அந்த அழகி யார்? அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான். முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது.
பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

திருமகளே நின் கருணை நிறை பார்வை


அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
 அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
 இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
 உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
 ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
 விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
 வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே